क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़

external-link copy
71 : 39

وَسِیْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ— قَالُوْا بَلٰی وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَی الْكٰفِرِیْنَ ۟

நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அதற்கருகில் வந்தவுடன் அதன் வாசல்கள் (திடீரென) திறக்கப்படும். இன்னும், அதன் காவலாளிகள் அவர்களிடம் கூறுவார்கள்: “உங்களில் இருந்தே உங்களுக்கு தூதர்கள் வரவில்லையா? அவர்கள் உங்களுக்கு உங்கள் இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டினார்களே. இன்னும், நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி உங்களை எச்சரித்தார்களே.” (நிராகரிப்பாளர்களாகிய) அவர்கள் கூறுவார்கள்: “ஏன் இல்லை. (தூதர்களும் அழைப்பாளர்களும் வந்தார்கள். நாங்கள்தான் அவர்களை நிராகரித்தோம். அல்லாஹ் கருணையாளன்தான்.) எனினும், நிராகரிப்பவர்கள் மீது (அல்லாஹ் உடைய) தண்டனையின் வாக்கு உறுதியாகி விட்டது.” info
التفاسير: