क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़

पृष्ठ संख्या:close

external-link copy
28 : 24

فَاِنْ لَّمْ تَجِدُوْا فِیْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰی یُؤْذَنَ لَكُمْ ۚ— وَاِنْ قِیْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰی لَكُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟

ஆக, அவற்றில் நீங்கள் ஒருவரையும் காணவில்லையெனில், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிற வரை அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள். இன்னும், “திரும்பி விடுங்கள்” என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் (வீட்டுக்குள் நுழையாமல்) திரும்பி விடுங்கள். அது உங்க(ள் ஆன்மாக்க)ளுக்கு மிக சுத்தமானதாகும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
29 : 24

لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ مَسْكُوْنَةٍ فِیْهَا مَتَاعٌ لَّكُمْ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟

உங்கள் பொருள் (மட்டும் வைக்கப்பட்டு) இருக்கிற (யாரும்) வசிக்காத வீடுகளில் நீங்கள் (அனுமதி இன்றி) நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். info
التفاسير:

external-link copy
30 : 24

قُلْ لِّلْمُؤْمِنِیْنَ یَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَیَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ— ذٰلِكَ اَزْكٰی لَهُمْ ؕ— اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا یَصْنَعُوْنَ ۟

(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை (தங்களுக்கு ஆகாததை பார்ப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் மறைவிடங்களை (பிறர் பார்வைகளிலிருந்தும் பாவத்திலிருந்தும்) பாதுகாத்துக் கொள்ளட்டும். அதுதான் அவர்களுக்கு மிக சுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்வதை ஆழ்ந்தறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
31 : 24

وَقُلْ لِّلْمُؤْمِنٰتِ یَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَیَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْیَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰی جُیُوْبِهِنَّ ۪— وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآىِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآىِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ اَوِ التّٰبِعِیْنَ غَیْرِ اُولِی الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِیْنَ لَمْ یَظْهَرُوْا عَلٰی عَوْرٰتِ النِّسَآءِ ۪— وَلَا یَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِیُعْلَمَ مَا یُخْفِیْنَ مِنْ زِیْنَتِهِنَّ ؕ— وَتُوْبُوْۤا اِلَی اللّٰهِ جَمِیْعًا اَیُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

இன்னும், (நபியே!) நம்பிக்கையாளர்களான பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தடுத்துக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் அலங்காரங்களை - அதிலிருந்து வெளியில் தெரிபவற்றைத் தவிர (மற்றதை) - வெளிப்படுத்த வேண்டாம்; இன்னும், அவர்கள் தங்கள் முந்தானைகளை தங்கள் (தலைகளுக்கு மேலிருந்து சட்டைகளின்) நெஞ்சுப் பகுதிகள் மீது போர்த்திக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் கணவர்களுக்கு; அல்லது, தங்கள் தந்தைகளுக்கு; அல்லது, தங்கள் கணவர்களின் தந்தைகளுக்கு; அல்லது, தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் கணவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் சகோதரர்களுக்கு; அல்லது, தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் (முஸ்லிமான) பெண்களுக்கு; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கு; அல்லது, ஆண்களில் (பெண்) ஆசையில்லாத பணியாளர்களுக்கு; அல்லது, பெண்களின் மறைவிடங்களை அறியாத சிறுவர்களுக்கு (ஆகிய இவர்களுக்கே)த் தவிர. (கணவனுக்கு மனைவியிடம் எந்த மறைவும் இல்லை. அவரைத் தவிர மேல் கூறப்பட்ட மற்றவர்களுக்கு முன் ஒரு பெண் தனது முகம், குடங்கை, கழுத்துப் பகுதி, பாதம், காதுகள் தெரியும்படி இருந்தால் அவள் மீது குற்றமில்லை.) தங்கள் அலங்காரங்களிலிருந்து அவர்கள் மறைப்பது (மற்றவர்களிடம்) அறியப்படுவதற்காக அவர்கள் தங்கள் கால்(களில் உள்ள சலங்கை கொலுசு)களை பூமியில் தட்டி நடக்கவேண்டாம். இன்னும், நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி திரும்பி விடுங்கள். info
التفاسير: