क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़

पृष्ठ संख्या:close

external-link copy
43 : 16

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟ۙ

(நபியே!) உமக்கு முன்பு நாம் (தூதர்களாக மனித இனத்தை சேர்ந்த) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவிப்போம். ஆகவே, (இவர்களை நோக்கி,) “நீங்கள் (இதை) அறியாதவர்களாக இருந்தால் (உண்மையான இறை வேதத்தின்) ஞானமுடையவர்களைக் கேளுங்கள்” (என்று கூறுவீராக!). info
التفاسير:

external-link copy
44 : 16

بِالْبَیِّنٰتِ وَالزُّبُرِ ؕ— وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الذِّكْرَ لِتُبَیِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَیْهِمْ وَلَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟

அத்தாட்சிகளையும் வேதங்களையும் கொண்டு (அத்தூதர்களை அனுப்பினோம்). (இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும்; (அந்த ஞானத்தையும் நபியின் விளக்கத்தையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும்! info
التفاسير:

external-link copy
45 : 16

اَفَاَمِنَ الَّذِیْنَ مَكَرُوا السَّیِّاٰتِ اَنْ یَّخْسِفَ اللّٰهُ بِهِمُ الْاَرْضَ اَوْ یَاْتِیَهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟ۙ

ஆக, தீமைகளுக்கு சூழ்ச்சி செய்தவர்கள் தங்களை அல்லாஹ் பூமியில் சொருகிவிடுவான் என்பதை; அல்லது, அவர்கள் உணராத விதத்தில் அவர்களுக்கு தண்டனை வரும் என்பதை அச்சமற்று விட்டனரா? info
التفاسير:

external-link copy
46 : 16

اَوْ یَاْخُذَهُمْ فِیْ تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِیْنَ ۟ۙ

அல்லது, அவர்களது பயணத்தில் அவர்களை அவன் (சோதனையால்) பிடித்து விடுவதை அச்சமற்றுவிட்டனரா? ஆக, அவர்களோ (அவனை) பலவீனப்படுத்துபவர்கள் இல்லை. info
التفاسير:

external-link copy
47 : 16

اَوْ یَاْخُذَهُمْ عَلٰی تَخَوُّفٍ ؕ— فَاِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟

அல்லது (அவர்களது பூமியையும் செல்வத்தையும்) கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவர்களை அவன் பிடித்து விடுவதை அச்சமற்றனரா? ஆக, நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமானவன், பெரும் கருணையாளன். (அதனால்தான் நீங்கள் உடனுக்குடன் தண்டிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டுள்ளீர்கள்.) info
التفاسير:

external-link copy
48 : 16

اَوَلَمْ یَرَوْا اِلٰی مَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ یَّتَفَیَّؤُا ظِلٰلُهٗ عَنِ الْیَمِیْنِ وَالشَّمَآىِٕلِ سُجَّدًا لِّلّٰهِ وَهُمْ دٰخِرُوْنَ ۟

மேலும், அல்லாஹ் படைத்த ஒரு பொருளையேனும் இவர்கள் கவனித்து பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் அல்லாஹ்விற்கு சிரம் பணிந்தவையாக வலப்புறமாக இன்னும் இடப்புறமாக சாய்கின்றன. மேலும், அவை (அனைத்தும் அவனுக்கு) மிகப் பணிந்தவையாக இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
49 : 16

وَلِلّٰهِ یَسْجُدُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰٓىِٕكَةُ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟

வானங்களில் உள்ள, பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்விற்கு சிரம் பணிகிறார்கள். அவர்களோ (அல்லாஹ்வை வணங்காமல்) பெருமையடிப்பதில்லை. info
التفاسير:

external-link copy
50 : 16

یَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَیَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ ۟

அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனைப் பயப்படுகிறார்கள். இன்னும், அவர்கள் தங்களுக்கு கட்டளையிடப்படுவதை (மட்டுமே) செய்கிறார்கள். info
التفاسير:

external-link copy
51 : 16

وَقَالَ اللّٰهُ لَا تَتَّخِذُوْۤا اِلٰهَیْنِ اثْنَیْنِ ۚ— اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— فَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களே! நீங்கள் வணங்குவதற்கு) இரண்டு கடவுள்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (நீங்கள் எவனை வணங்கவேண்டுமோ) அவனெல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். ஆக, என்னையே பயப்படுங்கள். info
التفاسير:

external-link copy
52 : 16

وَلَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَهُ الدِّیْنُ وَاصِبًا ؕ— اَفَغَیْرَ اللّٰهِ تَتَّقُوْنَ ۟

இன்னும், வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன! மேலும், வணக்க வழிபாடுகள் (நிலையானதாக,) என்றென்றும் அவனுக்கே உரியன. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றையா (தெய்வங்களாக ஆக்கிக்கொண்டு அவற்றை) அஞ்சுகிறீர்கள்? info
التفاسير:

external-link copy
53 : 16

وَمَا بِكُمْ مِّنْ نِّعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَیْهِ تَجْـَٔرُوْنَ ۟ۚ

மேலும், உங்களிடம் உள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு) கிடைத்தன. பிறகு, உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவனிடமே (பிரார்த்தித்து அதை நீக்கக் கோரி) மன்றாடுகிறீர்கள். info
التفاسير:

external-link copy
54 : 16

ثُمَّ اِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ اِذَا فَرِیْقٌ مِّنْكُمْ بِرَبِّهِمْ یُشْرِكُوْنَ ۟ۙ

பிறகு, அவன் உங்களை விட்டு அந்த துன்பத்தை நீக்கினால், அப்போது உங்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கிறார்கள். info
التفاسير: