કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - અબ્દુલ્ હમીદ બાકૂવી

પેજ નંબર:close

external-link copy
77 : 37

وَجَعَلْنَا ذُرِّیَّتَهٗ هُمُ الْبٰقِیْنَ ۟ؗۖ

77. அவர்களுடைய சந்ததிகளைப் பிற்காலத்தில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம். info
التفاسير:

external-link copy
78 : 37

وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ؗۖ

78. அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம். info
التفاسير:

external-link copy
79 : 37

سَلٰمٌ عَلٰی نُوْحٍ فِی الْعٰلَمِیْنَ ۟

79. ‘‘ஸலாம்'' ஈடேற்றம் நூஹுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது. info
التفاسير:

external-link copy
80 : 37

اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

80. இவ்வாறே நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம். info
التفاسير:

external-link copy
81 : 37

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟

81. (நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் ஒருவராகவே இருந்தார். info
التفاسير:

external-link copy
82 : 37

ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟

82. (ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம். info
التفاسير:

external-link copy
83 : 37

وَاِنَّ مِنْ شِیْعَتِهٖ لَاِبْرٰهِیْمَ ۟ۘ

83. நிச்சயமாக நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர்தான் இப்ராஹீம். info
التفاسير:

external-link copy
84 : 37

اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِیْمٍ ۟

84. அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில், info
التفاسير:

external-link copy
85 : 37

اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۟ۚ

85. அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டார், info
التفاسير:

external-link copy
86 : 37

اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِیْدُوْنَ ۟ؕ

86. ‘‘நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா? info
التفاسير:

external-link copy
87 : 37

فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟

87. அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?'' (என்று கேட்டார்). info
التفاسير:

external-link copy
88 : 37

فَنَظَرَ نَظْرَةً فِی النُّجُوْمِ ۟ۙ

88. ‘‘பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்தார். info
التفاسير:

external-link copy
89 : 37

فَقَالَ اِنِّیْ سَقِیْمٌ ۟

89. நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் (போல் இருக்கிறது)'' என்று கூறினார், info
التفاسير:

external-link copy
90 : 37

فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِیْنَ ۟

90. ஆகவே, அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்று விட்டனர். info
التفاسير:

external-link copy
91 : 37

فَرَاغَ اِلٰۤی اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ۚ

91. (பின்னர்) அவர், (அவர்களுடைய கோயிலுக்குள்) அவர்களுடைய தெய்வங்களிடம் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) ‘‘நீங்கள் இவற்றை ஏன் புசிப்பதில்லை? info
التفاسير:

external-link copy
92 : 37

مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ ۟

92. உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?'' என்று கேட்டார். (ஆனால், அவை பதில் அளிக்கவில்லை.) info
التفاسير:

external-link copy
93 : 37

فَرَاغَ عَلَیْهِمْ ضَرْبًا بِالْیَمِیْنِ ۟

93. ஆகவே, அவற்றைப் பலமாக அடித்து (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார். info
التفاسير:

external-link copy
94 : 37

فَاَقْبَلُوْۤا اِلَیْهِ یَزِفُّوْنَ ۟

94. ஆகவே, (திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதைக் கண்டதும் அதைப் பற்றிக் கேட்கவே) இப்ராஹீமிடம் ஓடி வந்தனர். info
التفاسير:

external-link copy
95 : 37

قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَ ۟ۙ

95. அவர், (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா? info
التفاسير:

external-link copy
96 : 37

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ ۟

96. உங்களையும், நீங்கள் சித்தரித்த அவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்'' என்றார். info
التفاسير:

external-link copy
97 : 37

قَالُوا ابْنُوْا لَهٗ بُنْیَانًا فَاَلْقُوْهُ فِی الْجَحِیْمِ ۟

97. (அதற்கு அவர்கள் பதில்கூற வகையறியாது கோபம் கொண்டு,) ‘‘இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
98 : 37

فَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِیْنَ ۟

98. இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக்கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவானவர்களாக ஆக்கி விட்டோம். info
التفاسير:

external-link copy
99 : 37

وَقَالَ اِنِّیْ ذَاهِبٌ اِلٰی رَبِّیْ سَیَهْدِیْنِ ۟

99. பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) ‘‘நான் என் இறைவனிடமே செல்கிறேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
100 : 37

رَبِّ هَبْ لِیْ مِنَ الصّٰلِحِیْنَ ۟

100. ‘‘என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!'' (என்றார்.) info
التفاسير:

external-link copy
101 : 37

فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِیْمٍ ۟

101. ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம். info
التفاسير:

external-link copy
102 : 37

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْیَ قَالَ یٰبُنَیَّ اِنِّیْۤ اَرٰی فِی الْمَنَامِ اَنِّیْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰی ؕ— قَالَ یٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ؗ— سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِیْنَ ۟

102. (அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார். info
التفاسير: