કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તમિળ ભાષામાં અનુવાદ - અબ્દુલ્ હમીદ બાકૂવી

પેજ નંબર:close

external-link copy
265 : 2

وَمَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَتَثْبِیْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَیْنِ ۚ— فَاِنْ لَّمْ یُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

265. எவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்கள் உள்ளங்களில் (இறைநம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுடைய (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை) மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கிறது. அதில் ஒரு பெரும் மழை பெய்தால் இரு மடங்கு பலனைத் தருகிறது. பெரும் மழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
266 : 2

اَیَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ— لَهٗ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ ۙ— وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّیَّةٌ ضُعَفَآءُ ۖۚ— فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِیْهِ نَارٌ فَاحْتَرَقَتْ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟۠

266. உங்களில் யார்தான் (இதை) விரும்புவார்: ஒருத்தருக்கு பேரீச்சை மற்றும் திராட்சைகளின் ஒரு தோப்பு இருக்கிறது. அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து எல்லா வகை கனிவர்க்கங்களும் அவருக்குக் கிடைக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. (சம்பாதிக்க) இயலாத பல சிறு குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். (இந்த நிலைமையில்) நெருப்புடன் கூடிய புயல் காற்று அடித்து அதை எரித்துவிட்டது. (இத்தகைய நிலைமையை யார்தான் விரும்புவார்?) நீங்கள் ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு (உதாரணங்களைக் கொண்டு) இப்படி தெளிவுபடுத்துகிறான். info
التفاسير:

external-link copy
267 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَیِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَكُمْ مِّنَ الْاَرْضِ ۪— وَلَا تَیَمَّمُوا الْخَبِیْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِیْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِیْهِ ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟

267. நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாகவே தவிர வாங்கிக்கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
268 : 2

اَلشَّیْطٰنُ یَعِدُكُمُ الْفَقْرَ وَیَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ ۚ— وَاللّٰهُ یَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟

268. (நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன் மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான். மேலும், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
269 : 2

یُّؤْتِی الْحِكْمَةَ مَنْ یَّشَآءُ ۚ— وَمَنْ یُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِیَ خَیْرًا كَثِیْرًا ؕ— وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟

269. (அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ‘ஹிக்மா' (ஞானம், நுண்ணறி)வை கொடுக்கிறான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகிறாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, ஞானத்தைக்கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெற மாட்டார்கள். info
التفاسير: