Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango.

Tonngoode hello ngoo:close

external-link copy
33 : 45

وَبَدَا لَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

45.33. அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்களின் தீய விளைவுகள் அவர்களுக்கு முன்னால் வெளிப்பட்டு விடும். எச்சரிக்கப்படும் போது அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த வேதனை அவர்கள் மீது இறங்கிவிடும். info
التفاسير:

external-link copy
34 : 45

وَقِیْلَ الْیَوْمَ نَنْسٰىكُمْ كَمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟

45.34. அல்லாஹ் அவர்களிடம் கூறினான்: “நீங்கள் இந்த நாளின் சந்திப்பை மறந்து அதற்காக நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்து தயாராகாமல் இருந்ததைப் போன்றே இன்றைய தினம் நரகத்தில் உங்களை விட்டுவிடுவோம். நீங்கள் ஒதுங்கி தங்குகின்ற இடம் நரகமாகும். உங்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தடுக்கும் உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
35 : 45

ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰیٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ— فَالْیَوْمَ لَا یُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟

45.35. நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை அல்லாஹ்வின் வசனங்களை நிச்சயமாக நீங்கள் ஏளனமாக பரிகாசம் செய்துகொண்டிருந்ததனாலாகும். உலக இன்பங்களும் இச்சைகளும் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டன. இன்றைய தினம் அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்த நிராகரிப்பாளர்கள் நரகத்திலிருந்து வெளியேற முடியாது. மாறாக அவர்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். நற்செயல் புரிவதற்காக அவர்கள் மீண்டும் உலகின்பால் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்களின் இறைவன் அவர்களைப் பொருந்திக்கொள்ளமாட்டான். info
التفاسير:

external-link copy
36 : 45

فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟

45.36. வானங்கள், பூமி மற்றும் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே புகழனைத்தும். info
التفاسير:

external-link copy
37 : 45

وَلَهُ الْكِبْرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠

45.37. வானங்களிலும் பூமியிலும் கண்ணியம் அவனுக்கே உரியது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்புகளில், அமைத்த விதிகளில், திட்டங்களில், அவன் இயற்றியவைகளில் ஞானம் மிக்கவன். info
التفاسير:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• الاستهزاء بآيات الله كفر.
1. அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாகும். info

• خطر الاغترار بلذات الدنيا وشهواتها.
2. உலக இன்பங்களைக் கொண்டு ஏமாறுவதன் விபரீதம். info

• ثبوت صفة الكبرياء لله تعالى.
3. அல்லாஹ்வுக்கு பெருமை என்ற பண்பும் உள்ளது என்பது உறுதியாகிறது. info

• إجابة الدعاء من أظهر أدلة وجود الله سبحانه وتعالى واستحقاقه العبادة.
4. பிரார்த்தனைக்குப் பதிலளிப்பது அல்லாஹ் இருக்கிறான், அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கான தெளிவான ஆதாரங்களில் ஒன்றாகும். info