Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango.

Tonngoode hello ngoo:close

external-link copy
51 : 33

تُرْجِیْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـْٔوِیْۤ اِلَیْكَ مَنْ تَشَآءُ ؕ— وَمَنِ ابْتَغَیْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَیْكَ ؕ— ذٰلِكَ اَدْنٰۤی اَنْ تَقَرَّ اَعْیُنُهُنَّ وَلَا یَحْزَنَّ وَیَرْضَیْنَ بِمَاۤ اٰتَیْتَهُنَّ كُلُّهُنَّ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَلِیْمًا ۟

33.51. -தூதரே!- நீர் உம் மனைவியரில் யாருடன் இரவு தங்குவதை ஒத்திப் போட விரும்புகிறீரோ அவருடன் இரவு தங்குவதை ஒத்திப்போடுவீராக. அவர்களில் யாருடன் இரவு தங்க விரும்புகிறீரோ அவருடன் இரவு தங்குவீராக. நீர் விலக்கி வைக்க விரும்பியவரை சேர்த்துக்கொண்டு அவருடன் இரவு தங்கினாலும் உம்மீது எந்தக் குற்றமும் இல்லை. இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதி உம் மனைவியர் கண்குளிர்ச்சி அடைவதற்கும் நீர் அவர்கள் அனைவருக்கும் வழங்கியதைக் கொண்டு அவர்கள் திருப்தியடையவதற்கும் ஏற்றதாகும். ஏனெனில் நீர் எந்தவொரு கடமையையும் விடவோ உரிமையைத் தடுத்து கஞ்சத்தனம் செய்யவோ இல்லை என்பதை அவர்கள் அறிந்தே உள்ளனர். -ஆண்களே!- உங்களின் உள்ளங்களிலுள்ளதை மனைவியரில் சிலரைவிட சிலரை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். தன் அடியார்களின் செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் சகிப்புத்தன்மை உடையவனாக இருக்கின்றான். எனவேதான் அவர்கள் அவனிடம் திரும்பலாம் என்பதனால் அவர்களை உடனுக்குடன் அவன் தண்டித்துவிடமாட்டான். info
التفاسير:

external-link copy
52 : 33

لَا یَحِلُّ لَكَ النِّسَآءُ مِنْ بَعْدُ وَلَاۤ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَكَتْ یَمِیْنُكَ ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ رَّقِیْبًا ۟۠

33.52. தூதரே! இனி உமது பாதுகாப்பில் இருக்கும் உம் மனைவியரைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மணமுடித்துக் கொள்வது உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்களுக்குப் பதிலாக வேறு பெண்களை மணந்துகொள்வதற்காக அவர்கள் அனைவரையுமோ அல்லது சிலரையோ விவாகரத்து செய்ய உமக்கு அனுமதியில்லை. நீர் மணமுடிக்க விரும்பும் மற்ற பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. ஆயினும் நீர் அடிமைப் பெண்களை குறித்த எண்ணிக்கை வரையறுக்காமல் வைத்துக் கொள்ளலாம். அல்லாஹ் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். இந்தக் கட்டளை நம்பிக்கையாளர்களுடைய அன்னையரின் சிறப்பைக் காட்டுகிறது. அதனால்தான் அவர்களை விவகாரத்து செய்யவோ அவர்களுடன் வேறு பெண்களை மணமுடித்துக் கொள்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது. info
التفاسير:

external-link copy
53 : 33

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتَ النَّبِیِّ اِلَّاۤ اَنْ یُّؤْذَنَ لَكُمْ اِلٰی طَعَامٍ غَیْرَ نٰظِرِیْنَ اِنٰىهُ وَلٰكِنْ اِذَا دُعِیْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِیْنَ لِحَدِیْثٍ ؕ— اِنَّ ذٰلِكُمْ كَانَ یُؤْذِی النَّبِیَّ فَیَسْتَحْیٖ مِنْكُمْ ؗ— وَاللّٰهُ لَا یَسْتَحْیٖ مِنَ الْحَقِّ ؕ— وَاِذَا سَاَلْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْـَٔلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ— ذٰلِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ— وَمَا كَانَ لَكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖۤ اَبَدًا ؕ— اِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِیْمًا ۟

33.53. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நீங்கள் நபியின் வீட்டில் விருந்துக்காக அழைக்கப்பட்டு உள்ளே நுழைவதற்கு அனுமதித்தாலே தவிர அதில் நுழையவேண்டாம். அங்கு உணவு தயாராவதை எதிர்பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் அமர்ந்திருக்காதீர்கள். நீங்கள் உண்பதற்கு உள்ளே அழைக்கப்பட்டால் செல்லுங்கள். உண்டு முடித்தவுடன் திரும்பி விடுங்கள். அதன்பிறகு அங்கு ஒருவருக்கொருவர் பேச்சில் ஈடுபட்டவாறு தங்கியிருக்காதீர்கள். நிச்சயமாக இவ்வாறு தங்கியிருப்பது தூதருக்குத் தொல்லை தருகிறது. அவர் உங்களிடம் எழுந்து செல்லுமாறு கூறுவதற்கு வெட்கப்படுகின்றார். உண்மையைக் கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். அதனால்தான் அவருக்குத் தொல்லையளிக்கக் கூடாது என்பதற்காக எழுந்து செல்லுமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். தூதரின் மனைவியரிடம் நீங்கள் பாத்திரம் போன்ற ஏதேனும் தேவையானவற்றை வேண்டினால் திரைமறைவிற்கு அப்பால் நின்று அதனை வேண்டுங்கள். தூதருக்குள்ள மதிப்பினால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நீங்கள் அவர்களைக் கண்டுவிடாமலிருக்க நேருக்கு நேர் அவர்களிடம் அதனை வேண்டாதீர்கள். திரைமறைவிற்கு அப்பால் நின்று வேண்டுவதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானதாகும். அதனால் ஷைத்தான் உங்களின் உள்ளங்களிலோ அவர்களின் உள்ளங்களிலோ தவறான ஊசலாட்டத்தை ஏற்படுத்த, பாவங்களை அழகாக்கிக்காட்ட முடியாது. -நம்பிக்கையாளர்களே!- கதைப்பதற்காக தாமதித்து அல்லாஹ்வின் தூதருக்குத் தொல்லையளிப்பதும் அவரின் மரணத்தின் பின் அவரது மனைவிமாரைத் திருமணம் செய்வதும் உங்களுக்குத் தகுந்ததல்ல. ஏனெனில் அவர்கள் நம்பிக்கையாளர்களின் அன்னையர்களாவர். எவருக்கும் தம் அன்னையை மணமுடித்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டதன்று. நிச்சயமாக -அவரது மரணத்திற்குப் பிறகு நீங்கள் அவர்களில் யாரையேனும் மணமுடிப்பது போன்ற ஏதேனும் ஓர் வடிவத்தில்- அவரை நோவினை செய்வது தடைசெய்யப்பட்டதாகவும் அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாகவும் இருக்கின்றது. info
التفاسير:

external-link copy
54 : 33

اِنْ تُبْدُوْا شَیْـًٔا اَوْ تُخْفُوْهُ فَاِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟

33.54. நிச்சயமாக நீங்கள் உங்களின் செயல்களில் எதையேனும் வெளிப்படுத்தினால் அல்லது அதனை மறைத்தால் அது அல்லாஹ்வை விட்டும் மறைவாக இருக்காது. திட்டமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். உங்களின் செயல்களிலும் ஏனையவற்றிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான். நலவுக்கு நன்மையும் தீங்குக்கு தீமையும் உண்டு. info
التفاسير:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• عظم مقام النبي صلى الله عليه وسلم عند ربه؛ ولذلك عاتب الصحابة رضي الله عنهم الذين مكثوا في بيته صلى الله عليه وسلم لِتَأَذِّيه من ذلك.
தனது இறைவனிடம் நபியவர்களுக்கு இருந்த உயரிய மதிப்பு. அதனால்தான் நபியவர்களுக்குத் தொல்லையளிக்கும் விதத்தில் அவர்களது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நபித்தோழர்களை கண்டித்தான். info

• ثبوت صفتي العلم والحلم لله تعالى.
2. அறிவு, நிதானம் என்ற இரு பண்புகளும் அல்லாஹ்வுக்கு உள்ளன என்பது உறுதியாகிறது. info

• الحياء من أخلاق النبي صلى الله عليه وسلم.
3. வெட்கம் நபியவர்களின் பண்புகளில் ஒன்றாகும். info

• صيانة مقام أمهات المؤمنين زوجات النبي صلى الله عليه وسلم.
4. நபியவர்களின் மனைவியரான நம்பிக்கையாளர்களின் அன்னையரின் அந்தஸ்தை பாதுகாத்தல். info