Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango.

external-link copy
13 : 31

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَهُوَ یَعِظُهٗ یٰبُنَیَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ— اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِیْمٌ ۟

31.13. -தூதரே!- லுக்மான் தம் மகனிடம் அவரை நன்மையின்பால் ஆர்வமூட்டியவராக, தீமையிலிருந்து எச்சரித்தவராக கூறியதை நினைவுகூர்வீராக: “என் மகனே! அல்லாஹ்வுடன் வேறு கடவுளை வணங்கி விடாதே. நிச்சயமாக அவனுடன் வேறு கடவுளை வணங்குவது தனக்குச் செய்யும் மிகப் பெரும் அநியாயமாக இருக்கின்றது. ஏனெனில் அது நிரந்தர நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் பெரும் பாவத்தில் ஈடுபடுவதாகும். info
التفاسير:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• لما فصَّل سبحانه ما يصيب الأم من جهد الحمل والوضع دلّ على مزيد برّها.
1. தாய் அனுபவிக்கும், கருவைச் சுமத்தல், பிரசவித்தல் ஆகிய சிரமங்களை அல்லாஹ் தெளிவுபடுத்தியிருப்பது தாயின் நலனில் மேலதிக அக்கறை செலுத்த வேண்டும் என்பதைக் கூறுகிறது. info

• نفع الطاعة وضرر المعصية عائد على العبد.
2. அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதால் ஏற்படும் நன்மை, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதால் ஏற்படும் தீமை இரண்டும் அடியானையே சாரும். info

• وجوب تعاهد الأبناء بالتربية والتعليم.
3. குழந்தைகளுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் போதித்து வளர்ப்பது கட்டாயமாகும். info

• شمول الآداب في الإسلام للسلوك الفردي والجماعي.
4. இஸ்லாமிய ஒழுக்கவியல் தனிநபர் மற்றும் சமூக நடத்தைகளை உள்ளடக்கியதாகும். info