Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango.

external-link copy
43 : 24

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُزْجِیْ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیْنَهٗ ثُمَّ یَجْعَلُهٗ رُكَامًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ— وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِیْهَا مِنْ بَرَدٍ فَیُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ وَیَصْرِفُهٗ عَنْ مَّنْ یَّشَآءُ ؕ— یَكَادُ سَنَا بَرْقِهٖ یَذْهَبُ بِالْاَبْصَارِ ۟ؕ

24.43. -தூதரே!- நீர் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ்தான் மேகங்களை இழுத்து வந்து பின்னர் அவற்றின் சில பகுதிகளை ஒன்றோடொன்று சேர்த்து அடுக்கடுக்காக குவியலாக்குகின்றான். மேகத்திலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். அவன் வானத்திலிருந்து, பலத்தால் மலைபோன்ற கனமான மேகத்திலிருந்து சிறுகற்கலைப் போன்ற ஆலங்கட்டிகளைப் பொழியச்செய்கிறான். அந்த குளிர்ந்த ஆலங்கட்டிகளை தான் நாடிய அடியார்களின்மீது விழச் செய்கிறான். தான் நாடிய அடியார்களை விட்டும் திருப்பி விடுகிறான். மேகத்திலிருந்து வரக்கூடிய மின்னலின் கடும் வெளிச்சம் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. info
التفاسير:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• موازنة المؤمن بين المشاغل الدنيوية والأعمال الأخروية أمر لازم.
1. ஒரு நம்பிக்கையாளன் இவ்வுலக காரியங்கள், மறுவுலகக் அமல்களுக்கிடையில் சமநிலை பேணுவது அவசியமான விடயமாகும். info

• بطلان عمل الكافر لفقد شرط الإيمان.
2. ஈமான் எனும் நிபந்தனையை இழந்ததனால் நிராகரிப்பாளனின் நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். info

• أن الكافر نشاز من مخلوقات الله المسبِّحة المطيعة.
3. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனைப் புகழ்ந்து கொண்டிருக்கும் படைப்புகளுக்கு மத்தியில் நிச்சயமாக நிராகரிப்பாளனே ஒதுங்கிநிற்கிறான். info

• جميع مراحل المطر من خلق الله وتقديره.
4. மழையின் அனைத்து கட்டங்களும் அல்லாஹ்வின் படைத்தல் மற்றும் நிர்ணயித்தலில் உள்ளதாகும். info