Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo Kur'aana e haala Taamil - Abdul Hamiid Bagawii

Tonngoode hello ngoo: 389:385 close

external-link copy
36 : 28

فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰی بِاٰیٰتِنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَرًی وَّمَا سَمِعْنَا بِهٰذَا فِیْۤ اٰبَآىِٕنَا الْاَوَّلِیْنَ ۟

36. நம் தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் ‘‘இது கற்பனை செய்யப்பட்ட சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
37 : 28

وَقَالَ مُوْسٰی رَبِّیْۤ اَعْلَمُ بِمَنْ جَآءَ بِالْهُدٰی مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟

37. அதற்கு மூஸா ‘‘ தன் இறைவனிடமிருந்து நேரான வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், நல்ல முடிவு யாருக்குக் கிடைக்கும் என்பதையும் என் இறைவனே நன்கறிவான். நிச்சயமாக (சூனியம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
38 : 28

وَقَالَ فِرْعَوْنُ یٰۤاَیُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرِیْ ۚ— فَاَوْقِدْ لِیْ یٰهَامٰنُ عَلَی الطِّیْنِ فَاجْعَلْ لِّیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَطَّلِعُ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی ۙ— وَاِنِّیْ لَاَظُنُّهٗ مِنَ الْكٰذِبِیْنَ ۟

38. அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) ‘‘ தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு கடவுள் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச்செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய கடவுளை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு கடவுள் இருப்பதாகக் கூறுகிறாரே!) இவ்விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான். info
التفاسير:

external-link copy
39 : 28

وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَیْنَا لَا یُرْجَعُوْنَ ۟

39. அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்தனர், நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டுவரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டனர். info
التفاسير:

external-link copy
40 : 28

فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ ۚ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟

40. ஆதலால், நாம் அவனையும் அவனுடைய இராணுவங்களையும் பிடித்து அவர்களை கடலில் எறிந்து (மூழ்கடித்து) விட்டோம். (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக. info
التفاسير:

external-link copy
41 : 28

وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّدْعُوْنَ اِلَی النَّارِ ۚ— وَیَوْمَ الْقِیٰمَةِ لَا یُنْصَرُوْنَ ۟

41. (அவர்கள் இவ்வுலகத்தில் இருந்தவரை மனிதர்களை) நரகத்திற்கு அழைக்கக்கூடிய தலைவர்களாகவே அவர்களை ஆக்கிவைத்தோம். மறுமை நாளிலோ அவர்களுக்கு எத்தகைய உதவியும் கிடைக்காது. info
التفاسير:

external-link copy
42 : 28

وَاَتْبَعْنٰهُمْ فِیْ هٰذِهِ الدُّنْیَا لَعْنَةً ۚ— وَیَوْمَ الْقِیٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِیْنَ ۟۠

42. இவ்வுலகில் நம் சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே இருக்கும். info
التفاسير:

external-link copy
43 : 28

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ مِنْ بَعْدِ مَاۤ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰی بَصَآىِٕرَ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟

43. (அவர்களுக்கு) முன்னிருந்த வகுப்பார்களையும் நாம் அழித்துவிட்ட பின்னர் (அவர்களுடைய வேதங்களும் அழிந்து விட்டதனால்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்கு நல்ல படிப்பினை தரக்கூடியதாகவும், நேரான வழியாகவும், அருளாகவும் இருந்தது. அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக! info
التفاسير: