Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo Kur'aana e haala Taamil - Abdul Hamiid Bagawii

Tonngoode hello ngoo:close

external-link copy
283 : 2

وَاِنْ كُنْتُمْ عَلٰی سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ؕ— فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْیُؤَدِّ الَّذِی اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ ؕ— وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ؕ— وَمَنْ یَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟۠

283. மேலும், நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர, (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக் கருதினால் உங்கள்) சாட்சியத்தை நீங்கள் மறைக்கவேண்டாம். எவரேனும் அதை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகிறது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான். info
التفاسير:

external-link copy
284 : 2

لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاِنْ تُبْدُوْا مَا فِیْۤ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ یُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ ؕ— فَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

284. (ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
285 : 2

اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَ ؕ— كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ ۫— لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ ۫— وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟

285. (மனிதர்களே! நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர, ‘‘அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்ல என்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து)விட மாட்டோம்'' என்றும், ‘‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடம்தான் நாங்கள் சேர வேண்டியதிருக்கிறது'' என்றும் கூறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
286 : 2

لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ؕ— لَهَا مَا كَسَبَتْ وَعَلَیْهَا مَا اكْتَسَبَتْ ؕ— رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِیْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ— رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَیْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِنَا ۚ— رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ— وَاعْفُ عَنَّا ۥ— وَاغْفِرْ لَنَا ۥ— وَارْحَمْنَا ۥ— اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟۠

286. அல்லாஹ் ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. அவை தேடிக் கொண்ட நன்மை அவற்றுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவற்றுக்கே (கேடு விளைவிக்கும்). ‘‘எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!). எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத சிரமங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே, (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக! info
التفاسير: