ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تامیلی ـ عمر شریف

அல்இன்பிதார்

external-link copy
1 : 82

اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ

(யுக முடிவில்) வானம் பிளந்துவிடும் போது, info
التفاسير:

external-link copy
2 : 82

وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ۟ۙ

இன்னும், நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது, info
التفاسير:

external-link copy
3 : 82

وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ ۟ۙ

இன்னும், கடல்கள் பிளக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடும்போது, info
التفاسير:

external-link copy
4 : 82

وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْ ۟ۙ

இன்னும், சமாதிகள் (அவற்றில் உள்ளவர்கள் எழுப்பப்படுவதற்காக) புரட்டப்படும்போது, info
التفاسير:

external-link copy
5 : 82

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْ ۟ؕ

(அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும், அது முற்படுத்தியதையும், அது பிற்படுத்தியதையும் அறிந்து கொள்ளும். (-ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மையையும் தீமையையும், அவ்வாறே தனக்கு பின்னர் வருவோர் தன்னை பின்பற்றும்படி வழிகாட்டிவிட்டு வந்த நல்ல காரியத்தை; அல்லது, தீய காரியத்தை அறிந்து கொள்ளும்.) info
التفاسير:

external-link copy
6 : 82

یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِ ۟ۙ

மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? info
التفاسير:

external-link copy
7 : 82

الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَ ۟ۙ

அவன்தான் உன்னைப் படைத்தான். இன்னும், அவன் உன்னை (தோற்றத்திலும் உறுப்புகளிலும்) சமமாக்கினான் (-ஒவ்வொரு உறுப்பையும் சீராக, ஒரு ஒழுங்குடன் படைத்தான்). இன்னும், உன்னை (அவன் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான். info
التفاسير:

external-link copy
8 : 82

فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ۟ؕ

எந்த உருவத்தில் (உன்னை படைக்க வேண்டும் என்று) நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான். info
التفاسير:

external-link copy
9 : 82

كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِ ۟ۙ

அவ்வாறல்ல! மாறாக, (நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படுவதையும்) கூலி கொடுக்கப்படுவதை(யும்) பொய்ப்பிக்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
10 : 82

وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ

நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
11 : 82

كِرَامًا كٰتِبِیْنَ ۟ۙ

(அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள். info
التفاسير:

external-link copy
12 : 82

یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟

நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (பிறகு, அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.) info
التفاسير:

external-link copy
13 : 82

اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ

நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
14 : 82

وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۙ

இன்னும், நிச்சயமாகத் தீயோர் ஜஹீம் என்ற நரகத்தில் இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
15 : 82

یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ ۟

(அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள். info
التفاسير:

external-link copy
16 : 82

وَمَا هُمْ عَنْهَا بِغَآىِٕبِیْنَ ۟ؕ

இன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை. info
التفاسير:

external-link copy
17 : 82

وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ۙ

இன்னும், (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்னவென்று உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
18 : 82

ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ؕ

பிறகு, கூலி நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
19 : 82

یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ— وَالْاَمْرُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۟۠

(அது) ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் (செய்வதற்கு) உரிமை பெறாத நாள். அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே உரியதாக இருக்கும்! info
التفاسير: