ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم

شماره صفحه:close

external-link copy
28 : 6

بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا یُخْفُوْنَ مِنْ قَبْلُ ؕ— وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟

6.28. திருப்பி அனுப்பப்பட்டால் நம்பிக்கைகொள்வோம் என அவர்கள் கூறுவது உண்மையல்ல. மாறாக தங்களின் வார்த்தையால் தாங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தி விட்டார்கள். அவர்களது உடலறப்புக்கள் அவர்களுக்கெதிராக சாட்சி கூறும் போது, (நாங்கள் இணைவைப்பாளர்களாக இருக்கவில்லை) என்ற அவர்களின் கூற்றின் மூலம், அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தவை வெளிவந்துவிட்டன. அவர்கள் உலகிற்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்ட ஷிர்க்கான, நிராகரிப்பான செயல்களில்தான் ஈடுபடுவார்கள். நாங்கள் திரும்பினால் நம்பிக்கைகொள்வோம் என்ற தங்களின் வாக்குறுதியில் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே. info
التفاسير:

external-link copy
29 : 6

وَقَالُوْۤا اِنْ هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِیْنَ ۟

6.29. இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள், “நாங்கள் இருக்கும் இந்த வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாங்கள் விசாரணைக்காக எழுப்பப்பட மாட்டோம்.” info
التفاسير:

external-link copy
30 : 6

وَلَوْ تَرٰۤی اِذْ وُقِفُوْا عَلٰی رَبِّهِمْ ؕ— قَالَ اَلَیْسَ هٰذَا بِالْحَقِّ ؕ— قَالُوْا بَلٰی وَرَبِّنَا ؕ— قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟۠

6.30. தூதரே! எழுப்பப்படும் நாளை மறுக்கக்கூடியவர்கள் தங்கள் இறைவனுக்கு முன்னால் நிற்பதை நீர் கண்டால் அவர்களின் மோசமான நிலையைக் கண்டு நீர் ஆச்சரியப்படுவீர். அப்போது அல்லாஹ் அவர்களிடம் கேட்பான், “நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்த இந்த நாள் உண்மையானதாகவும் சந்தேகமற்றதாகவும் இல்லையா?” அவர்கள் கூறுவார்கள், “எங்களைப் படைத்த எங்கள் இறைவனின் மீது ஆணையாக, நிச்சயமாக அது சந்தேகமற்ற உண்மையாகும். அப்போது அல்லாஹ் , “நீங்கள் உலக வாழ்வில் இந்த நாளை நிராகரித்துக் கொண்டிருந்ததனால் வேதனையைச் சுவையுங்கள்.” என்று அவர்களிடம் கூறுவான். info
التفاسير:

external-link copy
31 : 6

قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ ؕ— حَتّٰۤی اِذَا جَآءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا یٰحَسْرَتَنَا عَلٰی مَا فَرَّطْنَا فِیْهَا ۙ— وَهُمْ یَحْمِلُوْنَ اَوْزَارَهُمْ عَلٰی ظُهُوْرِهِمْ ؕ— اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ ۟

6.31. மறுமை நாளில் மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்து, அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை சாத்தியமற்றது எனக் கருதியவர்கள் இழப்படைந்துவிட்டார்கள். முன்னறிவித்தலின்றி திடீரென்று மறுமைநாள் அவர்களிடம் வந்துவிடும் போது பெரும் கைசேதப்பட்டுக் கூறுவார்கள், “எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து, மறுமை நாளுக்காக எந்த முன்னேற்பாடும் செய்யாது அல்லாஹ்வின் விடயத்தில் பொடுபோக்காக இருந்துவிட்டோமே!.” அவர்கள் தங்களின் பாவங்களை முதுகுகளில் சுமப்பார்கள். அவர்கள் சுமக்கும் பாவங்கள் எவ்வளவு மோசமானது! என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
32 : 6

وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ ؕ— وَلَلدَّارُ الْاٰخِرَةُ خَیْرٌ لِّلَّذِیْنَ یَتَّقُوْنَ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

6.32. நீங்கள் ஆசைகொள்ளும் இவ்வுலக வாழ்க்கை அல்லாஹ்வைத் திருப்தியடைச் செய்யும் காரியங்களைச் செய்யாதவர்களுக்கு விளையாட்டும் ஏமாற்றமுமேயாகும். இறைநம்பிக்கை, வணக்கவழிபாடு ஆகிய அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, இணைவைப்பு, பாவம் ஆகிய அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையின் வீடுதான் சிறந்ததாகும். இணைவைப்பாளர்களே, நீங்கள் இதனைப் புரிந்துகொண்டு அவன் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிய மாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
33 : 6

قَدْ نَعْلَمُ اِنَّهٗ لَیَحْزُنُكَ الَّذِیْ یَقُوْلُوْنَ فَاِنَّهُمْ لَا یُكَذِّبُوْنَكَ وَلٰكِنَّ الظّٰلِمِیْنَ بِاٰیٰتِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟

6.33. தூதரே! வெளிரங்கத்தில் அவர்கள் உம்மை நிராகரிப்பது உமக்கு கவலையை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். நீர் உண்மையாளர் நம்பிக்கையாளர் என்பதை அவர்கள் அறிந்ததனால் உள்ரங்கத்தில் அவர்கள் உம்மை நிராகரிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் உமது விடயத்தை வெளிரங்கத்தில் மறுத்து உள்ரங்கத்தில் உறுதியாக நம்பும் அநியாயக்கார சமுதாயமாகும். info
التفاسير:

external-link copy
34 : 6

وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰی مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰۤی اَتٰىهُمْ نَصْرُنَا ۚ— وَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ ۚ— وَلَقَدْ جَآءَكَ مِنْ نَّبَاۡ الْمُرْسَلِیْنَ ۟

6.34. அவர்கள் நீர் கொண்டுவந்ததை மட்டும்தான் நிராகரிக்கிறார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். உமக்கு முன்னர் வந்த தூதர்கள் பலர் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் சமூகங்கள் அவர்களைத் துன்புறுத்தியிருக்கின்றன. ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் உதவி வரும் வரை, பிரச்சாரத்திலும், அல்லாஹ்வின் பாதையில் போராடுவதன் மூலமும் பொறுமையாக இருந்து அவற்றை எதிர்கொண்டார்கள். அல்லாஹ் எழுதிவைத்த உதவியையும் தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் யாராலும் மாற்ற முடியாது. தூதுரே! முந்தைய தூதர்களின் செய்திகளும் அவர்களது சமுதாயங்கள் மூலம் அவர்கள் அனுபவித்தவைகளும், அவர்களது எதிரிகளை அழித்து அவர்களுக்கு வழங்கிய வெற்றியைப் பற்றிய செய்திகளும் உம்மிடம் வந்தேயிருக்கின்றன. info
التفاسير:

external-link copy
35 : 6

وَاِنْ كَانَ كَبُرَ عَلَیْكَ اِعْرَاضُهُمْ فَاِنِ اسْتَطَعْتَ اَنْ تَبْتَغِیَ نَفَقًا فِی الْاَرْضِ اَوْ سُلَّمًا فِی السَّمَآءِ فَتَاْتِیَهُمْ بِاٰیَةٍ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَمَعَهُمْ عَلَی الْهُدٰی فَلَا تَكُوْنَنَّ مِنَ الْجٰهِلِیْنَ ۟

6.35. தூதுரே! நீர் அவர்களுக்கு கொண்டுவந்த சத்தியத்தில் அவர்களின் நிராகரிப்பும் புறக்கணிப்பும் உமக்குப் பாரமாகத் தோன்றினால் உம்மால் முடிந்தால் பூமியில் ஒரு சுரங்கத்தையோ வானத்தில் ஒரு ஏணியையோ அமைத்து நாம் உமக்கு அளித்த ஆதாரங்கள், சான்றுகள் அல்லாமல் வேறு ஆதாரங்களையோ சான்றுகளையோ கொண்டு வரமுடியுமானால் கொண்டு வாரும். அவர்களுக்கு அல்லாஹ் நீர் கொண்டுவந்த நேர்வழியின் பக்கம் வழிகாட்ட நாடியிருந்தால் அவன் நேர்வழிகாட்டியிருப்பான். ஆயினும் அவன் ஒரு ஆழமான நோக்கத்திற்காக அவ்வாறு விரும்பவில்லை. எனவே அதனைப் புரியாத ஒருவராக நீர் ஆகிவிடாதீர். அதனை நீர் புரியாவிட்டால், அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையே என்ற கவலையால் உமது உயிரே போய்விடும். info
التفاسير:
از فواید آیات این صفحه:
• من عدل الله تعالى أنه يجمع العابد والمعبود والتابع والمتبوع في عَرَصات القيامة ليشهد بعضهم على بعض.
1. வணங்கியவன், வணங்கப்பட்டவன், பின்பற்றியவன், பின்பற்றப்பட்டவன் என அனைவரையும் அல்லாஹ் மறுமை நாளில் - அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் பொருட்டு - ஒன்றுதிரட்டுவான். இது அல்லாஹ் வழங்கும் நீதியாகும். info

• ليس كل من يسمع القرآن ينتفع به، فربما يوجد حائل مثل ختم القلب أو الصَّمَم عن الانتفاع أو غير ذلك.
2. குர்ஆனைச் செவியுறும் அனைவரும் பயனடைவார்கள் என்பதில்லை. உள்ளங்களிலும் செவிகளிலும் அடைப்பு உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் குர்ஆனிலிருந்து பயனயோ அல்லது வேறு எதாவது ஒன்றையோ அடைய முடியாது. info

• بيان أن المشركين وإن كانوا يكذبون في الظاهر فهم يستيقنون في دواخلهم بصدق النبي عليه الصلاة والسلام.
3. இணைவைப்பாளர்கள் வெளிப்படையாக நபியவர்களை பொய்யர் என்று கூறினாலும் அவர் உண்மையாளர் என்பதை உள்ளத்தில் உறுதியாக அறிந்திருந்தார்கள். info

• تسلية النبي عليه الصلاة والسلام ومواساته بإعلامه أن هذا التكذيب لم يقع له وحده، بل هي طريقة المشركين في معاملة الرسل السابقين.
4. இணைவைப்பாளர்கள் உம்மை மட்டும் புறக்கணிக்கவில்லை. மாறாக முந்தைய தூதர்களுடனும் இணைவைப்பாளர்கள் இவ்வாறே நடந்துகொண்டார்கள். என்று அறிவித்து நபியவர்களுக்கு ஆறுதல் கூறப்பட்டுள்ளது. info