ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم

شماره صفحه:close

external-link copy
74 : 43

اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۟ۚ

43.74. இறையச்சமுடையோருக்கு அளிக்கப்படும் கூலியைக் குறிப்பிட்ட பிறகு அல்லாஹ் அவர்களுக்கு நேரெதிரான குற்றவாளிகளின் கூலிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக நிராகரித்து பாவங்கள் புரிந்த குற்றவாளிகள் மறுமை நாளில் நரக வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். info
التفاسير:

external-link copy
75 : 43

لَا یُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِیْهِ مُبْلِسُوْنَ ۟ۚ

43.75. அவர்களைவிட்டும் வேதனை குறைக்கப்படாது. அவர்கள் அதில் அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடைந்துவிடுவார்கள். info
التفاسير:

external-link copy
76 : 43

وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِیْنَ ۟

43.76. அவர்களை நரகத்தில் பிரவேசிக்கச் செய்து நாம் அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. ஆயினும் நிராகரிப்பின் மூலம் அவர்களே தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டார்கள். info
التفاسير:

external-link copy
77 : 43

وَنَادَوْا یٰمٰلِكُ لِیَقْضِ عَلَیْنَا رَبُّكَ ؕ— قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ ۟

43.77. அவர்கள் நரகத்தின் காவலர் மாலிக்கை அழைப்பார்கள்: மாலிக்கே! உம் இறைவன் எங்களை மரணிக்கச் செய்துவிடட்டும். நாங்கள் வேதனையிலிருந்து விடுதலையடைந்து விடுகிறோம். மாலிக் பின்வருமாறு கூறி விடையளிப்பார்: “நிச்சயமாக நீங்கள் வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பவர்களே. மரணிக்கமாட்டீர்கள். உங்களைவிட்டும் வேதனை என்றும் முடிவடையாது. info
التفاسير:

external-link copy
78 : 43

لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ۟

43.78. நாங்கள் உலகில் உங்களிடம் சந்தேகமற்ற சத்தியத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் உங்களில் பெரும்பாலானோர் சத்தியத்தை வெறுப்பவர்களாகவே இருந்தீர்கள்.” info
التفاسير:

external-link copy
79 : 43

اَمْ اَبْرَمُوْۤا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَ ۟ۚ

43.79. அவர்கள் நபிக்கு எதிராக சூழ்ச்சியை தயார்செய்தால் நாம் அவர்களின் சூழ்ச்சியை மிகைக்கும் நுணுக்கமான திட்டங்களைத் தீட்டுவோம். info
التفاسير:

external-link copy
80 : 43

اَمْ یَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ ؕ— بَلٰی وَرُسُلُنَا لَدَیْهِمْ یَكْتُبُوْنَ ۟

43.80. தங்கள் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் இரகசியங்களையும் தங்களிடையே இரகசியமாக பேசிக்கொள்வதையும் நிச்சயமாக நாம் செவியுறமாட்டோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? இல்லை, நிச்சயமாக நாம் அவை அனைத்தையும் செவியேற்கிறோம். அவர்களிடம் இருக்கின்ற வானவர்கள் அவர்கள் செய்யும் அனைத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
81 : 43

قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖۗ— فَاَنَا اَوَّلُ الْعٰبِدِیْنَ ۟

அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகள் உண்டு (அவர்களின் கூறுவதை விட்டும் அல்லாஹ் மிக உயர்வானவன்) எனக் கூறுவோரிடம் கூறுங்கள் அல்லாஹ்வுக்கு பிள்ளை எதுவும் இல்லை. அதனை விட்டும் அவன் தூய்மையானவனும் பரிசுத்தமானவனுமாவான். நான் அவனை வணங்கி பரிசுத்தப்படுத்துவோரில் முதலாமவனாவேன்.
info
التفاسير:

external-link copy
82 : 43

سُبْحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟

43.82. இணையாளன், மனைவி, பிள்ளை இருப்பதாக இந்த இணைவைப்பாளர்கள் அவனுக்கு இணைத்துக் கூறும் கூற்றுகளைவிட்டும் வானங்கள், பூமி மற்றும் அர்ஷின் இறைவன் மிகவும் தூய்மையானவன். info
التفاسير:

external-link copy
83 : 43

فَذَرْهُمْ یَخُوْضُوْا وَیَلْعَبُوْا حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟

43.83. -தூதரே!- அவர்களை விட்டுவிடும். அவர்கள் வாக்களிக்கப்பட்ட அந்த நாளான மறுமையைச் சந்திக்கும் வரை அவர்கள் இருந்துகொண்டிருக்கும் அசத்தியத்தில் மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கட்டும். info
التفاسير:

external-link copy
84 : 43

وَهُوَ الَّذِیْ فِی السَّمَآءِ اِلٰهٌ وَّفِی الْاَرْضِ اِلٰهٌ ؕ— وَهُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟

43.84. அவனே வானத்திலும் பூமியிலும் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன். தான் படைத்த படைப்புகளில், அமைத்த விதிகளில், திட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன். தன் அடியார்களின் நிலமைகள் குறித்து நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info
التفاسير:

external-link copy
85 : 43

وَتَبٰرَكَ الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۚ— وَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ— وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

43.85. அல்லாஹ்வின் அபிவிருத்தியும் நன்மையும் பெருகிவிட்டன. வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடைப்பட்டுள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. மறுமை எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு அவனிடம் மட்டுமே உள்ளது. அவனைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலிபெறுவதற்காகவும் அவன் பக்கம் மட்டுமே நீங்கள் திரும்ப வேண்டும். info
التفاسير:

external-link copy
86 : 43

وَلَا یَمْلِكُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟

43.86. அல்லாஹ்வை விடுத்து இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வதற்கு சக்திபெற மாட்டா. ஆயினும் ஈஸா, உசைர், வானவர்கள் போன்ற ”அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன்” என்று அதனைப் புரிந்து சாட்சி கூறியோரைத் தவிர. info
التفاسير:

external-link copy
87 : 43

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَیَقُوْلُنَّ اللّٰهُ فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟ۙ

43.87. நீர் அவர்களிடம் அவர்களைப் படைத்தவன் யார் என்று கேட்டால் “அல்லாஹ்தான் எங்களைப் படைத்தான்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள். இவ்வாறு ஏற்றுக்கொண்ட பிறகு எவ்வாறுதான் அவர்கள் அவனை வணங்குவதைவிட்டும் திசைதிருப்பப்படுகிறார்களோ?!. info
التفاسير:

external-link copy
88 : 43

وَقِیْلِهٖ یٰرَبِّ اِنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ لَّا یُؤْمِنُوْنَ ۟ۘ

43.88. அவனிடமே தம் சமூகம் பொய்ப்பித்தது பற்றிய தூதரின் முறையீடு குறித்த அறிவு உள்ளது. “என் இறைவா! நிச்சயமாக இந்த மக்கள் நீ எனக்கு எதனைக் கொடுத்து இவர்களின் பால் அனுப்பினாயோ அதனை நம்பிக்கைகொள்ளாத மக்களாக இருக்கின்றார்கள்” என்று அதிலே அவரின் வார்த்தை உள்ளது. info
التفاسير:

external-link copy
89 : 43

فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ ؕ— فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟۠

43.89. அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்களின் தீங்கினைத் தடுக்கும் வார்த்தையைக் கூறுவீராக. -இது மக்காவில் கூறப்பட்டது- தாங்கள் அனுபவிக்கப்போகும் தண்டனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். info
التفاسير:
از فواید آیات این صفحه:
• كراهة الحق خطر عظيم.
1. சத்தியத்தை வெறுப்பது பெரும் ஆபத்தாகும். info

• مكر الكافرين يعود عليهم ولو بعد حين.
2. நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி சில காலத்துக்குப் பிறகாவது அவர்களுக்கு எதிராகவே அமையும். info

• كلما ازداد علم العبد بربه، ازداد ثقة بربه وتسليمًا لشرعه.
3. தன் இறைவனைப் பற்றிய அடியானின் அறிவு எவ்வளவு அதிகரிக்குமோ அவன் தனது இறைவனின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அவனது மார்க்கத்திற்கு கட்டுப்படும் தன்மையும் அதிகரிக்கும். info

• اختصاص الله بعلم وقت الساعة.
4. மறுமை நாள் நிகழும் நேரத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். info