ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم

external-link copy
154 : 2

وَلَا تَقُوْلُوْا لِمَنْ یُّقْتَلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ— بَلْ اَحْیَآءٌ وَّلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ ۟

2.154. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் ஜிஹாதில் கொல்லப்பட்டவர்களை மற்றவர்களைப்போன்று இறந்தவர்கள் என்று கூறாதீர்கள். அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் உயிருடன் உள்ளார்கள். ஆயினும் அவர்கள் வாழ்வதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில் அது வஹியின் மூலமாகவே அன்றி யாராலும் அறிந்துகொள்ள முடியாத பிரத்யேகமான வாழ்க்கையாகும். info
التفاسير:
از فواید آیات این صفحه:
• الابتلاء سُنَّة الله تعالى في عباده، وقد وعد الصابرين على ذلك بأعظم الجزاء وأكرم المنازل.
1. சோதனை அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய நியதியாகும். அதைப் பொறுமையுடன் எதிர்கொள்பவர்களுக்கு அழகிய கூலியையும் கண்ணியமான அந்தஸ்தையும் தருவதாக அவன் வாக்களித்துள்ளான். info

• مشروعية السعي بين الصفا والمروة لمن حج البيت أو اعتمر.
2. ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே "சயீ" செய்ய வேண்டும். info

• من أعظم الآثام وأشدها عقوبة كتمان الحق الذي أنزله الله، والتلبيس على الناس، وإضلالهم عن الهدى الذي جاءت به الرسل.
3. அல்லாஹ் இறக்கிய சத்தியத்தை மறைத்தல், மக்களைக் குழப்புதல், தூதர்கள் கொண்டுவந்த வழிகாட்டுதலை விட்டும் மக்களைத் தடுத்தல் ஆகியவை பெரும் பாவமாகவும் கடும் தண்டனைக்கு உரியதாகவும் இருக்கின்றது. info