ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى - عبدالحميد باقوى

شماره صفحه:close

external-link copy
152 : 6

وَلَا تَقْرَبُوْا مَالَ الْیَتِیْمِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ حَتّٰی یَبْلُغَ اَشُدَّهٗ ۚ— وَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ بِالْقِسْطِ ۚ— لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ۚ— وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰی ۚ— وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا ؕ— ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟ۙ

152. ‘‘அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரை நியாயமான முறையில் தவிர நெருங்காதீர்கள். அளவை (சரியான அளவு கொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுங்கள். ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை (உங்கள் இறைவன்) உங்களுக்கு உபதேசிக்கிறான். info
التفاسير:

external-link copy
153 : 6

وَاَنَّ هٰذَا صِرَاطِیْ مُسْتَقِیْمًا فَاتَّبِعُوْهُ ۚ— وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِیْلِهٖ ؕ— ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟

153. ‘‘நிச்சயமாக இதுதான் என் நேரான வழியாகும். அதையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக (உங்கள் இறைவன்) இவற்றை உங்களுக்கு உபதேசிக்கிறான்'' (என்று கூறுங்கள்). info
التفاسير:

external-link copy
154 : 6

ثُمَّ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ تَمَامًا عَلَی الَّذِیْۤ اَحْسَنَ وَتَفْصِیْلًا لِّكُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَآءِ رَبِّهِمْ یُؤْمِنُوْنَ ۟۠

154. (தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம் அருட்கொடையை) முழுமைப்படுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. (அது) நேரான வழியாகவும் (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போமென்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்). info
التفاسير:

external-link copy
155 : 6

وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟ۙ

155. (மனிதர்களே!) இதுவும் வேத நூலாகும். இதை நாமே இறக்கிவைத்தோம். (இது) மிக்க பாக்கியமுடையது. ஆகவே, இதையே நீங்கள் பின்பற்றுங்கள். (அவனுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். அதனால் அவனது அருளுக்குள்ளாவீர்கள். info
التفاسير:

external-link copy
156 : 6

اَنْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اُنْزِلَ الْكِتٰبُ عَلٰی طَآىِٕفَتَیْنِ مِنْ قَبْلِنَا ۪— وَاِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغٰفِلِیْنَ ۟ۙ

156. (இணைவைத்து வணங்கும் அரபிகளே!) ‘‘நமக்கு முன்னர் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய) இரு கூட்டத்தினர் மீது (மட்டுமே) வேதம் அருளப்பட்டது. ஆகவே, (அவர்களுடைய மொழி எங்களுக்குத் தெரியாததால்) நாங்கள் அவர்களிடம் அதைப் படிக்கவும், படித்துக் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும். info
التفاسير:

external-link copy
157 : 6

اَوْ تَقُوْلُوْا لَوْ اَنَّاۤ اُنْزِلَ عَلَیْنَا الْكِتٰبُ لَكُنَّاۤ اَهْدٰی مِنْهُمْ ۚ— فَقَدْ جَآءَكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَهُدًی وَّرَحْمَةٌ ۚ— فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰیٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا ؕ— سَنَجْزِی الَّذِیْنَ یَصْدِفُوْنَ عَنْ اٰیٰتِنَا سُوْٓءَ الْعَذَابِ بِمَا كَانُوْا یَصْدِفُوْنَ ۟

157. அல்லது ‘‘நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை அருளினோம். ஆகவே,) உங்கள் இறைவனிடம் இருந்து, மிகத் தெளிவான (வசனங்களையுடைய) வேதம் உங்களிடம் வந்துவிட்டது. (அது) நேரான வழியாகவும் (இறைவனுடைய) அருளாகவும் இருக்கிறது. ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம் வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். info
التفاسير: