আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

পৃষ্ঠা নং:close

external-link copy
36 : 50

وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِی الْبِلَادِ ؕ— هَلْ مِنْ مَّحِیْصٍ ۟

இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம், அவர்கள் இவர்களை விட முரட்டு சக்தி உடைய பலசாலிகளாக இருந்தார்கள். ஆக, அவர்கள் (தங்களுக்கு) தப்பிக்கும் இடம் ஏதும் (அவர்களுக்கு) இருக்கிறதா? என்று நகரங்களில் (மூலை முடுக்குகளில் எல்லாம்) சுற்றி வந்தார்கள். info
التفاسير:

external-link copy
37 : 50

اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَی السَّمْعَ وَهُوَ شَهِیْدٌ ۟

யார் ஒருவர் அவருக்கு (சிந்திக்கின்ற உயிருள்ள) உள்ளம் (-அறிவு) இருக்கிறதோ அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது. அல்லது, யார் ஒருவர் - அவரோ (உள்ளத்தால்) பிரசன்னமாகி இருந்து, (சொல்லப்படுவதை) நன்கு புரிபவராக இருந்து, (அழிக்கப்பட்ட முற்கால மக்களைப் பற்றி நாம் கூறுகிற செய்திகளை) - செவிசாய்த்து கேட்பாரோ (அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது.) info
التفاسير:

external-link copy
38 : 50

وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ۖۗ— وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ ۟

இன்னும், திட்டவட்டமாக வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம். நமக்கு எவ்வித சோர்வும் (அசதியும், களைப்பும்) ஏற்படவில்லை. info
التفاسير:

external-link copy
39 : 50

فَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ ۟ۚ

ஆக, (நபியே!) அவர்கள் பேசுகிற பேச்சுகளை சகிப்பீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னரும் மறைவதற்கு முன்னரும் உமது இறைவனை புகழ்ந்து துதித்து வணங்குவீராக! info
التفاسير:

external-link copy
40 : 50

وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ ۟

இன்னும், இரவி(ன் எல்லா நேரங்களி)லும் (உம்மால் முடிந்தளவு) அவனை துதித்து வணங்குவீராக! இன்னும் அந்த (மஃரிப்) தொழுகைக்குப் பிறகு (சுன்னத்தான இரு ரக்அத்துகளை) தொழுவீராக! info
التفاسير:

external-link copy
41 : 50

وَاسْتَمِعْ یَوْمَ یُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ

(நபியே!) சமீபமான ஓர் இடத்தில் இருந்து அழைப்பவர் அழைக்கின்ற நாளில் (அந்த அழைப்பை) நீர் செவியுறுவீராக! info
التفاسير:

external-link copy
42 : 50

یَّوْمَ یَسْمَعُوْنَ الصَّیْحَةَ بِالْحَقِّ ؕ— ذٰلِكَ یَوْمُ الْخُرُوْجِ ۟

அவர்கள் உண்மையில் அந்த சப்தத்தை செவியுறுகின்ற நாளில் (தங்களது புதைக்குழியில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள்). அதுதான் (படைப்புகள் அனைவரும் புதைக்குழிகளில் இருந்து) வெளியேறுகிற நாளாகும். info
التفاسير:

external-link copy
43 : 50

اِنَّا نَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَاِلَیْنَا الْمَصِیْرُ ۟ۙ

நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கிறோம்; மரணிக்க வைக்கிறோம். இன்னும், நம் பக்கமே (இறுதி) மீளுமிடம் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
44 : 50

یَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا ؕ— ذٰلِكَ حَشْرٌ عَلَیْنَا یَسِیْرٌ ۟

அவர்களை விட்டும் பூமி பிளந்து அவர்கள் (அதிலிருந்து) அதிவிரைவாக வெளியேறுகின்ற நாளில் (அவர்களின் மீளுமிடம் நம் பக்கமே இருக்கிறது). இது (-மறுமையில் படைப்புகளை உயிர்ப்பித்து ஒன்று சேர்ப்பது) நமக்கு இலகுவான ஒன்று திரட்டலாகும். info
التفاسير:

external-link copy
45 : 50

نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِجَبَّارٍ ۫— فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ یَّخَافُ وَعِیْدِ ۟۠

அவர்கள் கூறுவதை நாம் அதிகம் அறிந்தவர்கள் ஆவோம். (நபியே!) நீர் அவர்கள் மீது (-அவர்களை அடக்கி வைக்கக்கூடிய, கட்டாயப்படுத்தக்கூடிய) கொடுங்கோலனாக இல்லை. ஆகவே, எனது எச்சரிக்கையை பயப்படுகிறவருக்கு இந்த குர்ஆன் மூலமாக அறிவுரை வழங்குவீராக! info
التفاسير: