আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

পৃষ্ঠা নং:close

external-link copy
32 : 42

وَمِنْ اٰیٰتِهِ الْجَوَارِ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ؕ

இன்னும், மலைகளைப் போன்று கடலில் மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான். info
التفاسير:

external-link copy
33 : 42

اِنْ یَّشَاْ یُسْكِنِ الرِّیْحَ فَیَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰی ظَهْرِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟ۙ

அவன் நாடினால் காற்றுகளை அமைதியாக்கி விடுவான். அவை (-அந்த கப்பல்கள் முன்னேறிச் செல்லாமல்) அதன் மீதே (-அந்த தண்ணீரின் மீதே) அசையாமல் நிற்கக்கூடியதாக ஆகிவிடும். பெரும் பொறுமையாளர்கள், நன்றி உள்ளவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
34 : 42

اَوْ یُوْبِقْهُنَّ بِمَا كَسَبُوْا وَیَعْفُ عَنْ كَثِیْرٍ ۟ۙ

அல்லது (பாவங்களில்) அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவற்றை (-அந்த கப்பல்களை) அவன் அழித்து விடுவான். இன்னும், (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் முற்றிலும் மன்னித்துவிடுகிறான். info
التفاسير:

external-link copy
35 : 42

وَّیَعْلَمَ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِنَا ؕ— مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟

நமது வசனங்களில் தர்க்கிப்பவர்களை அவன் நன்கறிவான். தப்பிக்கும் இடம் ஏதும் அவர்களுக்கு இல்லை. info
التفاسير:

external-link copy
36 : 42

فَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی لِلَّذِیْنَ اٰمَنُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚ

ஆக, நீங்கள் (உலக பொருள்களில்) எது கொடுக்கப்பட்டுள்ளீர்களோ அவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் இன்பமாகும். இன்னும், நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்திரு)ப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் (மறுமையில்) எது உள்ளதோ அதுதான் மிகச் சிறந்ததும் மிக நிரந்தரமானதும் ஆகும். info
التفاسير:

external-link copy
37 : 42

وَالَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ یَغْفِرُوْنَ ۟ۚ

இன்னும், அவர்கள் பெரும் பாவங்களை விட்டும், மானக்கேடான விஷயங்களை விட்டும் விலகி இருப்பார்கள். அவர்கள் கோபப்படும்போது (தங்களை கோபப்படுத்தியவர்களை) மன்னித்து விடுவார்கள். info
التفاسير:

external-link copy
38 : 42

وَالَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ ۪— وَاَمْرُهُمْ شُوْرٰی بَیْنَهُمْ ۪— وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۚ

இன்னும், அவர்கள் தங்கள் இறைவனுக்கு பதில் அளிப்பார்கள். (அவனது அழைப்பை, கட்டளைகளை ஏற்று நடப்பார்கள்.) இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும், அவர்களது காரியம் அவர்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படும். இன்னும், அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள். info
التفاسير:

external-link copy
39 : 42

وَالَّذِیْنَ اِذَاۤ اَصَابَهُمُ الْبَغْیُ هُمْ یَنْتَصِرُوْنَ ۟

இன்னும், அவர்கள் மீது அநியாயம் நிகழ்ந்தால் அவர்கள் (நீதமாக, எல்லை மீறாமல்) பழி வாங்குவார்கள். info
التفاسير:

external-link copy
40 : 42

وَجَزٰٓؤُا سَیِّئَةٍ سَیِّئَةٌ مِّثْلُهَا ۚ— فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟

தீமையின் தண்டனை அது போன்ற தீமைதான். ஆக, யார் மன்னிப்பாரோ, சமாதானம் செய்வாரோ அவரது கூலி அல்லாஹ்வின் மீது கட்டாயமாக இருக்கிறது. நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான். info
التفاسير:

external-link copy
41 : 42

وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهٖ فَاُولٰٓىِٕكَ مَا عَلَیْهِمْ مِّنْ سَبِیْلٍ ۟ؕ

யார் தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் பழிவாங்குவாரோ அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை. info
التفاسير:

external-link copy
42 : 42

اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَظْلِمُوْنَ النَّاسَ وَیَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

குற்றமெல்லாம் மக்கள் மீது (முதலில்) அநியாயம் செய்பவர்கள் மீதும், பூமியில் அநியாயமாக எல்லை மீறுகிறவர்கள் (-கலகம் செய்வதிலும் மக்களுக்கு இன்னல் செய்வதிலும் ஈடுபடுகிறவர்கள்) மீதும்தான். அத்தகையோர், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. info
التفاسير:

external-link copy
43 : 42

وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟۠

இன்னும், யார் பொறுமையாக இருப்பாரோ, மன்னிப்பாரோ நிச்சயமாக அது மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும். info
التفاسير:

external-link copy
44 : 42

وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِیٍّ مِّنْ بَعْدِهٖ ؕ— وَتَرَی الظّٰلِمِیْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ یَقُوْلُوْنَ هَلْ اِلٰی مَرَدٍّ مِّنْ سَبِیْلٍ ۟ۚ

யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவனுக்குப் பிறகு (-அல்லாஹ் அவனை கைவிட்டதற்குப் பிறகு) அவனுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை. இன்னும், (மறுமையில்) அநியாயக்காரர்கள் தண்டனையைப் பார்க்கும்போது, (உலகத்திற்கு) திரும்புவதற்கு ஏதேனும் வழி உண்டா என்று அவர்கள் கூறுவதை (நபியே) நீர் பார்ப்பீர்!. info
التفاسير: