আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

পৃষ্ঠা নং:close

external-link copy
41 : 40

وَیٰقَوْمِ مَا لِیْۤ اَدْعُوْكُمْ اِلَی النَّجٰوةِ وَتَدْعُوْنَنِیْۤ اِلَی النَّارِ ۟ؕ

“என் மக்களே! எனக்கு என்ன நேர்ந்தது (நீங்கள் நரகத்தை விட்டு) பாதுகாப்பு பெறுவதற்கு நான் உங்களை அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகத்தின் பக்கம் அழைக்கிறீர்கள்.” info
التفاسير:

external-link copy
42 : 40

تَدْعُوْنَنِیْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؗ— وَّاَنَا اَدْعُوْكُمْ اِلَی الْعَزِیْزِ الْغَفَّارِ ۟

“நான் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் எனக்கு அறிவில்லாத ஒன்றை அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனின் பக்கம், மகா மன்னிப்பாளனின் பக்கம் அழைக்கிறேன்.” info
التفاسير:

external-link copy
43 : 40

لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ لَیْسَ لَهٗ دَعْوَةٌ فِی الدُّنْیَا وَلَا فِی الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَاۤ اِلَی اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِیْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ ۟

“கண்டிப்பாக, நீங்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை ஏதும் இல்லை. (-நீங்கள் கேட்கிற எந்த பிரார்த்தனையும் அது செவியுறாது, செவியுறவும் முடியாது.) நிச்சயமாக நாம் திருப்பப்படுவது அல்லாஹ்வின் பக்கம்தான், நிச்சயமாக எல்லை மீறி பாவம் செய்பவர்கள்தான் நரகவாசிகள்.” info
التفاسير:

external-link copy
44 : 40

فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَكُمْ ؕ— وَاُفَوِّضُ اَمْرِیْۤ اِلَی اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟

“ஆக, நான் உங்களுக்கு கூறுவதை நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள். என் காரியத்தை நான் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.” info
التفاسير:

external-link copy
45 : 40

فَوَقٰىهُ اللّٰهُ سَیِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِ ۟ۚ

ஆக, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளை விட்டு அல்லாஹ் அவரை பாதுகாத்தான். இன்னும், ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான தண்டனை சூழ்ந்துகொண்டது. info
التفاسير:

external-link copy
46 : 40

اَلنَّارُ یُعْرَضُوْنَ عَلَیْهَا غُدُوًّا وَّعَشِیًّا ۚ— وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ ۫— اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ ۟

நரகம், அதில் காலையிலும் மாலையிலும் அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். (இது அவர்களுக்கு மண்ணறையில் நடக்கும் தண்டனையாகும்.) இன்னும், மறுமை நிகழ்கின்ற நாளிலோ, “ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான தண்டனையில் புகுத்துங்கள்!” (என்று சொல்லப்படும்). info
التفاسير:

external-link copy
47 : 40

وَاِذْ یَتَحَآجُّوْنَ فِی النَّارِ فَیَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِیْبًا مِّنَ النَّارِ ۟

இன்னும், அவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது, (வழிகெட்ட) பலவீனர்கள் பெருமை அடித்த (தங்கள் தலை)வர்களை நோக்கி கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, நரகத்திலிருந்து ஒரு பகுதி (சிறிது தண்டனை)யை நீங்கள் எங்களை விட்டு தடுப்பீர்களா?” info
التفاسير:

external-link copy
48 : 40

قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِیْهَاۤ اِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَیْنَ الْعِبَادِ ۟

பெருமை அடித்த (தலை)வர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாம் எல்லோரும் அதில்தான் தங்கி இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு மத்தியில் (இறுதி) தீர்ப்பளித்துவிட்டான்.” info
التفاسير:

external-link copy
49 : 40

وَقَالَ الَّذِیْنَ فِی النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ یُخَفِّفْ عَنَّا یَوْمًا مِّنَ الْعَذَابِ ۟

நரகத்தில் உள்ளவர்கள் நரகத்தின் காவலாளிகளுக்குக் கூறுவார்கள்: “உங்கள் இறைவனை அழையுங்கள்! அவன் எங்களை விட்டும் ஒரு நாளாவது தண்டனையை இலகுவாக்குவான்.” info
التفاسير: