আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

external-link copy
77 : 4

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ قِیْلَ لَهُمْ كُفُّوْۤا اَیْدِیَكُمْ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ۚ— فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ یَخْشَوْنَ النَّاسَ كَخَشْیَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْیَةً ۚ— وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَیْنَا الْقِتَالَ ۚ— لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ؕ— قُلْ مَتَاعُ الدُّنْیَا قَلِیْلٌ ۚ— وَالْاٰخِرَةُ خَیْرٌ لِّمَنِ اتَّقٰی ۫— وَلَا تُظْلَمُوْنَ فَتِیْلًا ۟

“உங்கள் கைகளை (போரிடுவதிலிருந்து) தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஸகாத்தை கொடுங்கள்” என்று எவர்களுக்கு கூறப்பட்டதோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? ஆக, போர் அவர்கள் மீது விதிக்கப்பட்டபோது, அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வை பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் (அதைவிட) மிகக் கடுமையாக மக்களைப் பயப்படுகிறார்கள். “எங்கள் இறைவா! ஏன் எங்கள் மீது போரை விதித்தாய்? இன்னும் சமீபமான ஒரு தவணை வரை எங்களை நீ பிற்படுத்தி இருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானதாகும்! அல்லாஹ்வை அஞ்சியவருக்கு மறுமை மிக மேலானதாகும். (மறுமையில் நீங்கள்) ஒரு நூல் அளவு கூட அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். info
التفاسير: