আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

external-link copy
153 : 4

یَسْـَٔلُكَ اَهْلُ الْكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَیْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ فَقَدْ سَاَلُوْا مُوْسٰۤی اَكْبَرَ مِنْ ذٰلِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ— ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰلِكَ ۚ— وَاٰتَیْنَا مُوْسٰی سُلْطٰنًا مُّبِیْنًا ۟

(நபியே!) வேதக்காரர்கள், வானத்திலிருந்து ஒரு வேதத்தை அவர்கள் மீது நீர் இறக்கி தரும்படி உம்மிடம் கேட்கிறார்கள். ஆக, திட்டமாக இதைவிட மிகப் பெரிய (விஷயத்)தை மூஸாவிடம் அவர்கள் கேட்டனர். அதாவது, “அல்லாஹ்வை கண்கூடாக எங்களுக்குக் காண்பி!” என்று கூறினர். ஆகவே, அவர்களின் அநியாயத்தினால் அவர்களை இடி முழக்கம் பிடித்தது. பிறகு, தெளிவான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்ததன் பின்னர் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். ஆக, அதை(யும் நாம் அவர்களுக்கு) மன்னித்தோம். இன்னும், மூஸாவிற்கு தெளிவான சான்றையும் கொடுத்தோம். info
التفاسير: