আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

external-link copy
152 : 3

وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ— حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَعَصَیْتُمْ مِّنْ بَعْدِ مَاۤ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ؕ— مِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الدُّنْیَا وَمِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الْاٰخِرَةَ ۚ— ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِیَبْتَلِیَكُمْ ۚ— وَلَقَدْ عَفَا عَنْكُمْ ؕ— وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟

(நம்பிக்கையாளர்களே! உஹுத் போரில்) நீங்கள் அவனுடைய அனுமதியுடன் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை வெட்டி வீழ்த்தியபோது அல்லாஹ் தன் வாக்கை உங்களுக்கு திட்டவட்டமாக உண்மையாக்கினான். இறுதியாக, நீங்கள் கோழையாகி, (தூதருடைய) கட்டளையில் தர்க்கித்து, நீங்கள் விரும்புவதை அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு பின்னர் (தூதருக்கு) மாறுசெய்தபோது (அல்லாஹ் தன் உதவியை நிறுத்தினான்). (மலைக் குன்றின் மீது நிறுத்தப்பட்டிருந்த) உங்களில் உலக (செல்வ)த்தை நாடி (நபியின் கட்டளையை மீறி மலையிலிருந்து கீழே இறங்கி)யவரும் உண்டு. இன்னும், உங்களில் மறுமை(யின் நன்மை)யை நாடிய (நபியின் கட்டளைப்படி அங்கேயே இருந்து வீர மரணம் அடைந்த)வரும் உண்டு. பிறகு உங்களைச் சோதிப்பதற்காக (தோற்கடிக்கப்பட இருந்த) அவர்களை விட்டும் உங்களை திருப்பினான். (இன்னும் உங்கள் தவறுக்குப் பின்னர்) திட்டவட்டமாக அவன் உங்களை மன்னித்துவிட்டான். அல்லாஹ், நம்பிக்கையாளர்கள் மீது (எப்போதும் விசேஷமான) அருளுடையவன் ஆவான். info
التفاسير: