আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

পৃষ্ঠা নং:close

external-link copy
32 : 24

وَاَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَالصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآىِٕكُمْ ؕ— اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟

இன்னும், உங்களில் துணை இல்லாதவர்களுக்கும் (-மனைவி இல்லாத ஆண்களுக்கும், கணவன் இல்லாத பெண்களுக்கும்) உங்கள் ஆண் அடிமைகளிலும் உங்கள் பெண் அடிமைகளிலும் உள்ள (ஒழுக்கமான) நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களை தனது அருளால் (அவர்களுக்கு செல்வத்தை கொடுத்து) நிறைவுறச் செய்வான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
33 : 24

وَلْیَسْتَعْفِفِ الَّذِیْنَ لَا یَجِدُوْنَ نِكَاحًا حَتّٰی یُغْنِیَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ— وَالَّذِیْنَ یَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِیْهِمْ خَیْرًا ۖۗ— وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِیْۤ اٰتٰىكُمْ ؕ— وَلَا تُكْرِهُوْا فَتَیٰتِكُمْ عَلَی الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَمَنْ یُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

எவர்கள் திருமணத்திற்கு வசதி பெறவில்லையோ அவர்கள் அல்லாஹ் அவர்களை தன் அருளால் வசதியுள்ளவர்களாக ஆக்கும் வரை ஒழுக்கமாக இருக்கட்டும். இன்னும், உங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் உரிமைப் பத்திரம் எழுதி விடுதலை பெற எவர்கள் விரும்புகிறார்களோ அவர்களில் நீங்கள் நன்மையை (-நம்பிக்கையையும் நல்ல குணத்தையும்) அறிந்தால் அவர்களுக்கு உரிமைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள். இன்னும், (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து அவர்களுக்கு கொடு(த்து அவர்கள் விடுதலை பெற உதவு)ங்கள். நீங்கள் உலக வாழ்க்கையின் செல்வத்தை சம்பாதிக்க விரும்பி உங்கள் அடிமை பெண்களை விபச்சாரத்தில் நிர்ப்பந்த(மாக ஈடு)படுத்தாதீர்கள், அந்த அடிமைப் பெண்கள் பத்தினித்தனத்தை விரும்பினால். இன்னும், யார் அந்த அடிமை பெண்களை (விபச்சாரம் செய்ய) நிர்ப்பந்திப்பாரோ நிச்சயமாக அல்லாஹ் அந்த அடிமை பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் அவர்களை மன்னிப்பவன், (அவர்கள் மீது) கருணை காட்டுபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
34 : 24

وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟۠

திட்டவட்டமாக உங்களுக்கு தெளிவான வசனங்களையும் உங்களுக்கு முன்னர் (வாழ்ந்து) சென்றவர்களின் உதாரணத்தையும் இறையச்சமுள்ளவர்களுக்கு உபதேசத்தையும் இறக்கி இருக்கிறோம். info
التفاسير:

external-link copy
35 : 24

اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِیْهَا مِصْبَاحٌ ؕ— اَلْمِصْبَاحُ فِیْ زُجَاجَةٍ ؕ— اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّیٌّ یُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰرَكَةٍ زَیْتُوْنَةٍ لَّا شَرْقِیَّةٍ وَّلَا غَرْبِیَّةٍ ۙ— یَّكَادُ زَیْتُهَا یُضِیْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ؕ— نُوْرٌ عَلٰی نُوْرٍ ؕ— یَهْدِی اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ— وَیَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟ۙ

அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஒளி (நேர்வழிகாட்டி) ஆவான். (முஃமினுடைய உள்ளத்தில் உள்ள) அவனது (நேர்வழி மற்றும் குர்ஆனுடைய) ஒளியின் தன்மையாவது ஒரு மாடத்தைப் போன்றாகும். அதில் ஒரு விளக்கு உள்ளது. அந்த விளக்கு கண்ணாடியில் உள்ளது. அந்தக் கண்ணாடி மின்னக்கூடிய ஒரு நட்சத்திரத்தைப் போல் உள்ளது. (அந்த விளக்கு,) கிழக்கிலும் அல்லாத மேற்கிலும் அல்லாத (-சூரியன் உதிக்கும் போதும் அது மறையும் போதும் அதன் வெயில் படாத அளவிற்கு இலைகள் அடர்த்தியான) ஆலிவ் என்னும் பாக்கியமான மரத்தில் இருந்து (எடுக்கப்பட்ட எண்ணெயிலிருந்து) எரிக்கப்படுகிறது. அதன் எண்ணெய் ஒளிர ஆரம்பித்து விடுகிறது, அதன் மீது தீ படவில்லை என்றாலும் சரியே. (தீ பட்டால் அது) ஒளிக்கு மேல் ஒளியாக ஆகிவிடுகிறது. அல்லாஹ், தனது (இஸ்லாம் எனும்) ஒளியின் பக்கம் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். இன்னும், மக்களுக்கு (அவர்கள் நேர்வழி பெறுவதற்காக பல) உதாரணங்களை அல்லாஹ் விவரிக்கிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
36 : 24

فِیْ بُیُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَیُذْكَرَ فِیْهَا اسْمُهٗ ۙ— یُسَبِّحُ لَهٗ فِیْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟ۙ

(அந்த விளக்கு) இறை இல்லங்களில் எரிக்கப்படுகிறது. அவை உயர்த்தி கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமினான ஆண்கள்) அவனை துதித்து தொழுகிறார்கள். info
التفاسير: