আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

external-link copy
231 : 2

وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ ۪— وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا ۚ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ— وَلَا تَتَّخِذُوْۤا اٰیٰتِ اللّٰهِ هُزُوًا ؗ— وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ وَمَاۤ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ یَعِظُكُمْ بِهٖ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠

இன்னும், நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் (இத்தா முடியும்) தவணையை அடைந்தால் நல்ல முறையில் (மண வாழ்க்கையில்) அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். அல்லது, (விவாகரத்து செய்து) நல்ல முறையில் விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிழைத்து (அவர்கள் மீது) அநியாயம் செய்வதற்காக அவர்களை (உங்கள் திருமண பந்தத்தில்) தடுத்து வைக்காதீர்கள். எவர் அதைச் செய்வாரோ திட்டமாக அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்தார். அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுக்காதீர்கள். இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவுகூருங்கள்! இன்னும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும் ஞானத்தையும் நினைவில் வையுங்கள்! அவன் இவற்றின் மூலமாக உங்களுக்கு உபதேசிக்கிறான். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள். info
التفاسير: