আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

external-link copy
213 : 2

كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۫— فَبَعَثَ اللّٰهُ النَّبِیّٖنَ مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۪— وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِیَحْكُمَ بَیْنَ النَّاسِ فِیْمَا اخْتَلَفُوْا فِیْهِ ؕ— وَمَا اخْتَلَفَ فِیْهِ اِلَّا الَّذِیْنَ اُوْتُوْهُ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ بَغْیًا بَیْنَهُمْ ۚ— فَهَدَی اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِیْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ؕ— وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

(ஆரம்ப காலத்தில்) மக்கள் ஒரே ஒரு சமுதாயமாக (-ஒரே ஒரு கொள்கையுடையவர்களாக) இருந்தனர். (பிறகு, தங்களுக்கு மத்தியில் வேறுபட்டார்கள்.) ஆக, அல்லாஹ் நபிமார்களை நற்செய்தியாளர்களாகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாகவும் (தொடர்ந்து) அனுப்பி வைத்தான். (இஸ்ரவேலருடைய) மக்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு செய்த விஷயங்களில் (இறை வேதம்) தீர்ப்பளிப்பதற்காக அவர்களுடன் உண்மையான (தவ்ராத்) வேதத்தையும் இறக்கினான். தெளிவான சான்றுகள் தங்களுக்கு வந்த பின்னர் தங்களுக்கு மத்தியில் (போட்டி) பொறாமையின் காரணமாக, (தவ்ராத்) வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அ(ந்த வேதத்)தில் தங்களுக்குள் கருத்து வேறுபட்டனர். ஆகவே, அவர்கள் கருத்து வேறுபட்ட உண்மையின் பக்கம் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தனது கட்டளையினால் நேர்வழி காட்டினான். அல்லாஹ், தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான். info
التفاسير: