আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

external-link copy
71 : 16

وَاللّٰهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلٰی بَعْضٍ فِی الرِّزْقِ ۚ— فَمَا الَّذِیْنَ فُضِّلُوْا بِرَآدِّیْ رِزْقِهِمْ عَلٰی مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَهُمْ فِیْهِ سَوَآءٌ ؕ— اَفَبِنِعْمَةِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟

இன்னும், உங்களில் சிலரைவிட சிலரை வாழ்வாதாரத்தில் அல்லாஹ்தான் மேன்மையாக்கினான். ஆக, இவ்வாறிருந்தும், மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வாதாரத்(தில் தங்கள் தேவைக்குப் போக இருப்ப)தை தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் மீது திருப்பக் கூடியவர்களாக இல்லை. (அப்படி கொடுத்தால்) அவர்களும் அதில் (இவர்களுக்கு) சமமானவர்களாக ஆகிவிடுவார்கள். (ஆனால், அதை அவர்கள் விரும்புவது இல்லை. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மட்டும் இணை தெய்வங்களை எப்படி கற்பனை செய்கிறார்கள்?) அல்லாஹ்வின் அருளையா (அவர்கள்) நிராகரிக்கிறார்கள் (அதில் அல்லாஹ் அல்லாதவர்களை கூட்டாக்குவதன் மூலம்)? info
التفاسير: