আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

external-link copy
28 : 10

وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ— فَزَیَّلْنَا بَیْنَهُمْ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِیَّانَا تَعْبُدُوْنَ ۟

இன்னும், (நபியே!) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளை நினைவு கூர்வீராக! பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி, “நீங்களும் (நீங்கள் இணை வைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். ஆக, அவர்களுக்கிடையில் (இருந்த தொடர்பை) நீக்கி விடுவோம். (அப்போது) “நீங்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை” என்று அவர்க(ள் இணை வைத்து வணங்கிய அவர்க)ளுடைய தெய்வங்கள் கூறும். info
التفاسير: