আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ

পৃষ্ঠা নং: 568:568 close

external-link copy
11 : 70

یُّبَصَّرُوْنَهُمْ ؕ— یَوَدُّ الْمُجْرِمُ لَوْ یَفْتَدِیْ مِنْ عَذَابِ یَوْمِىِٕذٍ بِبَنِیْهِ ۟ۙ

70.11. ஒவ்வொருவரும் தங்களுக்கு நெருங்கியவர்களைக் காண்பார்கள். யாரும் மறைவாக இருக்கமாட்டார்கள். இருந்தும் அந்த நாளின் பயங்கரத்தால் யாரும் யாரைக்குறித்தும் விசாரிக்க மாட்டார். நரகத்திற்குத் தகுதியானவன் வேதனையிலிருந்து தப்பிக்க தனக்கு பகரமாக தன் பிள்ளைகளை ஈடாகக்கொடுக்க விரும்புவான். info
التفاسير:

external-link copy
12 : 70

وَصَاحِبَتِهٖ وَاَخِیْهِ ۟ۙ

70.12. தன் மனைவியையும் தன் சகோதரனையும் ஈடாகக்கொடுப்பான். info
التفاسير:

external-link copy
13 : 70

وَفَصِیْلَتِهِ الَّتِیْ تُـْٔوِیْهِ ۟ۙ

70.13. கஷ்டமான சமயங்களில் தன்னோடு துணைநின்ற தனக்கு நெருக்கமான சொந்தங்களையும் தன்னிடமிருந்து ஈடாகக்கொடுப்பான். info
التفاسير:

external-link copy
14 : 70

وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ— ثُمَّ یُنْجِیْهِ ۟ۙ

70.14. இன்னும் பூமியிலுள்ள மனித, ஜின், ஏனைய அனைவரையும் ஈடாகக் கொடுத்துவிட விரும்புவான். அவையனைத்தையும் ஈடாகக் கொடுத்தாவது நரக வேதனையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் விரும்புவான். info
التفاسير:

external-link copy
15 : 70

كَلَّا ؕ— اِنَّهَا لَظٰی ۟ۙ

70.15. இந்த குற்றவாளி எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் மறுமையின் நெருப்பாகும். info
التفاسير:

external-link copy
16 : 70

نَزَّاعَةً لِّلشَّوٰی ۟ۚۖ

70.16. அது கொழுந்துவிட்டெரியும் கடுமையான சூட்டினால் தலையின் தோலை கடுமையாக உரித்துவிடும். info
التفاسير:

external-link copy
17 : 70

تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰی ۟ۙ

70.17. அது சத்தியத்தைப் புறக்கணித்து அதனை விட்டும் தூரப்படுத்தி, அதனை நம்பிக்கைகொள்ளாமலும் செயற்படுத்தாமலும் இருந்தவனை அழைக்கும். info
التفاسير:

external-link copy
18 : 70

وَجَمَعَ فَاَوْعٰی ۟

70.18. அவன் செல்வத்தை சேர்த்துவைத்தான். அல்லாஹ்வின் பாதையில் அதனைச் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்தான். info
التفاسير:

external-link copy
19 : 70

اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۟ۙ

70.19. நிச்சயமாக மனிதன் கடும் பேராசைக்காரனாக படைக்கப்பட்டுள்ளான். info
التفاسير:

external-link copy
20 : 70

اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۟ۙ

70.20. அவனுக்கு நோய் அல்லது ஏழ்மை ஆகிய ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் குறைவாக பொறுமை கொள்பவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
21 : 70

وَّاِذَا مَسَّهُ الْخَیْرُ مَنُوْعًا ۟ۙ

70.21. அவனுக்கு ஏதேனும் மகிழ்ச்சியான செல்வமோ, செழிப்போ ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வின் பாதையில் அதனை செலவு செய்யாமல் அதிகம் தடுத்து வைத்துக்கொள்பவனாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
22 : 70

اِلَّا الْمُصَلِّیْنَ ۟ۙ

70.22. ஆயினும் தொழுகையாளிகளைத் தவிர. அவர்கள் அந்த மோசமான பண்புகளைவிட்டும் தூய்மையானவர்களாவர். info
التفاسير:

external-link copy
23 : 70

الَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ دَآىِٕمُوْنَ ۟

70.23. அவர்கள் தங்கள் தொழுகைகளைத் தவறாது கடைப்பிடிப்பார்கள். அவற்றைவிட்டு அவர்கள் கவனமற்று இருப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் அவற்றை நிறைவேற்றுகிறார்கள். info
التفاسير:

external-link copy
24 : 70

وَالَّذِیْنَ فِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌ ۟

70.24. அவர்களின் செல்வங்களில் கடமையாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கின்றது. info
التفاسير:

external-link copy
25 : 70

لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟

70.25. ஏதோவொரு காரணத்தால் வாழ்வாதாரம் தடுக்கப்பட்டு யாசிக்கும், யாசிக்காத அனைவருக்கும் அவர்கள் அதனை வழங்குகிறார்கள். info
التفاسير:

external-link copy
26 : 70

وَالَّذِیْنَ یُصَدِّقُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟

70.26. அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலி வழங்கும் நாளான மறுமையை அவர்கள் உண்மைப்படுத்துகிறார்கள். info
التفاسير:

external-link copy
27 : 70

وَالَّذِیْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۟ۚ

70.27. அவர்கள் நற்காரியங்கள் செய்திருந்தும், தங்கள் இறைவனின் வேதனையை அஞ்சக்கூடியவர்களாக இருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
28 : 70

اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَیْرُ مَاْمُوْنٍ ۪۟

70.28. நிச்சயமாக இறைவனின் வேதனை பயங்கரமானது. அறிவாளி அதனைவிட்டும் அச்சமற்றிருக்கமாட்டார். info
التفاسير:

external-link copy
29 : 70

وَالَّذِیْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۟ۙ

70.29. அவர்கள் தங்களின் வெட்கஸ்தலங்களை மறைத்தும் மானக்கேடான காரியங்களை விட்டும் தூரமாகி பாதுகாத்துக் கொள்வார்கள். info
التفاسير:

external-link copy
30 : 70

اِلَّا عَلٰۤی اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَاِنَّهُمْ غَیْرُ مَلُوْمِیْنَ ۟ۚ

70.30. ஆயினும் தங்களின் மனைவியரிடமோ அல்லது அடிமைப் பெண்களிடமோ தவிர. உடலுறவு மூலமோ, ஏனைய உறவு மூலமோ அவர்களிடம் அனுபவிக்கும் இன்பத்திற்காக நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
31 : 70

فَمَنِ ابْتَغٰی وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۟ۚ

70.31. மேற்கூறப்பட்ட மனைவியர்கள், அடிமைப் பெண்கள் தவிர்ந்த மற்றவர்களிடம் இன்பம் அனுபவிக்க நாடுபவர்கள்தாம் அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறியவர்களாவர். info
التفاسير:

external-link copy
32 : 70

وَالَّذِیْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۟

70.32. அவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள், இரகசியங்கள், அவையல்லாதவைகள் ஆகிய அனைத்தையும் பாதுகாப்பார்கள். மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள். தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றில் அவர்கள் மோசம்செய்வதுமில்லை. தங்களின் வாக்குறுதிகளை முறிப்பதுமில்லை. info
التفاسير:

external-link copy
33 : 70

وَالَّذِیْنَ هُمْ بِشَهٰدٰتِهِمْ قَآىِٕمُوْنَ ۟

70.33. அவர்கள் தங்களின் சாட்சியங்களை உரிய விதத்தில் நிலைநாட்டுவார்கள். உறவோ, பகைமையோ அவற்றில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
info
التفاسير:

external-link copy
34 : 70

وَالَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ یُحَافِظُوْنَ ۟ؕ

70.34. அவர்கள் தங்கள் தொழுகைகளை உரிய நேரங்களில் தூய்மையுடனும் அமைதியுடனும் நிறைவேற்றுகிறார்கள். எதுவும் அவர்களை அவற்றைவிட்டும் திசைதிருப்ப முடியாது. info
التفاسير:

external-link copy
35 : 70

اُولٰٓىِٕكَ فِیْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَ ۟ؕ۠

70.35. இந்த பண்புகளைப் பெற்றவர்கள் நிலையான அருட்கொடைகளைப் பெற்றும் அல்லாஹ்வின் திருமுகத்தை கண்டும் கண்ணியமிக்க சுவனங்களில் இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
36 : 70

فَمَالِ الَّذِیْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِیْنَ ۟ۙ

70.36. -தூதரே!- உம் சமூகத்தைச் சார்ந்த உம்மைச் சூழவுள்ள இணைவைப்பாளர்கள் விரைந்து உம்மை பொய்ப்பிப்பதற்கு அவர்களை எது இட்டுச் சென்றது? info
التفاسير:

external-link copy
37 : 70

عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ عِزِیْنَ ۟

70.37. அவர்கள் உமது வலதுபுறமும் இடதுபுறமும் கூட்டம் கூட்டமாக உம்மைச் சூழ்ந்துள்ளார்களே! info
التفاسير:

external-link copy
38 : 70

اَیَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّدْخَلَ جَنَّةَ نَعِیْمٍ ۟ۙ

70.38. அவர்களில் ஒவ்வொருவரும் நிராகரிப்பில் நிலையாக இருந்துகொண்டே அல்லாஹ் தங்களை நிலையான இன்பச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து அதிலுள்ள நிலையான இன்பங்களை அனுபவிக்கலாம் என்று ஆசை கொண்டுள்ளார்களா? info
التفاسير:

external-link copy
39 : 70

كَلَّا ؕ— اِنَّا خَلَقْنٰهُمْ مِّمَّا یَعْلَمُوْنَ ۟

70.39. அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக நாம் அவர்கள் அறிந்தவற்றிலிருந்தே அவர்களைப் படைத்துள்ளோம். அற்ப நீரிலிருந்து நாம் அவர்களைப் படைத்துள்ளோம். தங்களுக்குக்கூட பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்திபெறாத பலவீனர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பிறகு எவ்வாறு அவர்கள் கர்வம் கொள்கிறார்கள். info
التفاسير:

external-link copy
40 : 70

فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَ ۟ۙ

கிழக்கு, மேற்கு, சூரியன், சந்திரன் ஏனைய கோள்கள் ஆகுியவற்றின் இறைவனான அல்லாஹ் நாம்தான் ஆற்றலுடையோர் என்பதைத் தன் மீது சத்தியம் செய்து கூறியுள்ளான்.
info
التفاسير:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• شدة عذاب النار حيث يود أهل النار أن ينجوا منها بكل وسيلة مما كانوا يعرفونه من وسائل الدنيا.
1. உலகில் தங்களுக்கு தெரிந்த அத்தனை வழிகளையும் பயன்படுத்தி நரகத்திலிருந்து தப்பிவிட வேண்டும் என்று நரகவாசிகள் விரும்பும் அளவுக்கு நரக வேதனை கடுமையானது. info

• الصلاة من أعظم ما تكفَّر به السيئات في الدنيا، ويتوقى بها من نار الآخرة.
2. உலகில் பாவத்திற்கு பரிகாரம் வழங்கும் மிகப் பெரும் ஒரு செயலே தொழுகையாகும். மறுமையின் நெருப்பிலிருந்தும் அதன் மூலம் பாதுகாப்புப் பெறலாம். info

• الخوف من عذاب الله دافع للعمل الصالح.
3. அல்லாஹ்வின் வேதனையை அஞ்சுவது நற்செயலின் பக்கம் தூண்டக்கூடியதாகும். info