আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ

পৃষ্ঠা নং:close

external-link copy
45 : 53

وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ۙ

53.45. நிச்சயமாக அவன் ஆண், பெண் என்ற இரு இணைகளைப் படைத்துள்ளான், info
التفاسير:

external-link copy
46 : 53

مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰی ۪۟

53.46. கர்ப்பப்பையில் செலுத்தப்படும் விந்துத் துளியிலிருந்து. info
التفاسير:

external-link copy
47 : 53

وَاَنَّ عَلَیْهِ النَّشْاَةَ الْاُخْرٰی ۟ۙ

53.47. நிச்சயமாக அவனே அவர்கள் இறந்தபின்னர் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி மறுமுறை படைக்கிறான். info
التفاسير:

external-link copy
48 : 53

وَاَنَّهٗ هُوَ اَغْنٰی وَاَقْنٰی ۟ۙ

53.48. அவனே தன் அடியார்களில் தான் நாடியவர்களை சொத்துக்களை வழங்கி செல்வந்தர்களாக்குகிறான். மக்கள் சேகரித்து சீமானாக ஆகின்ற அளவுக்கு சொத்தை வழங்குகிறான். info
التفاسير:

external-link copy
49 : 53

وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعْرٰی ۟ۙ

அவன்தான் இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு வணங்கி வழிபட்டுக்கொண்டிருந்த (ஷிஃரா எனும்) நட்சத்திரத்தின் இறைவன்.
info
التفاسير:

external-link copy
50 : 53

وَاَنَّهٗۤ اَهْلَكَ عَادَا ١لْاُوْلٰی ۟ۙ

53.50. அவனே ஹுதின் சமூகத்தினரான ஆத் சமூகத்தை அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தபோது அழித்தான். info
التفاسير:

external-link copy
51 : 53

وَثَمُوْدَاۡ فَمَاۤ اَبْقٰی ۟ۙ

53.51. ஸாலிஹின் மக்களான ஸமூத் சமூகத்தை அழித்தான். அவர்களில் யாரையும் விட்டுவைக்கவில்லை. info
التفاسير:

external-link copy
52 : 53

وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ— اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰی ۟ؕ

53.52. ஆத், ஸமூத் ஆகியோருக்கு முன்னர் நூஹின் சமூகத்தை அழித்தான். நிச்சயமாக நூஹின் மக்கள் ஆத் மற்றும் ஸமூத் சமூகத்தைவிட கொடுங்கோலர்களாகவும் வரம்பு மீறக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். ஏனெனில் நூஹ் அவர்களிடையே இருந்து தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளாக அவர்களை அல்லாஹ் ஒருவனின் பக்கம் அழைத்தார். ஆனால் அவர்கள் அவருக்குப் பதிலளிக்கவில்லை. info
التفاسير:

external-link copy
53 : 53

وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰی ۟ۙ

53.53. அவன் லூத்தின் சமூகத்தினர் வாழ்ந்த ஊர்களை வானத்தின்பால் உயர்த்திய பின்னர் அதனை கவிழ்த்து பின்னர் பூமியில் விழச் செய்தான். info
التفاسير:

external-link copy
54 : 53

فَغَشّٰىهَا مَا غَشّٰی ۟ۚ

53.54. அவற்றை வானத்தில்பால் உயர்த்தி பூமியில் விழச் செய்தபிறகு அவற்றை மூட வேண்டிய கற்கள் மூடிக் கொண்டன. info
التفاسير:

external-link copy
55 : 53

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكَ تَتَمَارٰی ۟

53.55. மனிதனே! உன் இறைவனின் வல்லமையை அறிவிக்கக்கூடிய சான்றுகளில் எதனைக் கொண்டு படிப்பினை பெறாமல் தர்க்கம் செய்வாய்? info
التفاسير:

external-link copy
56 : 53

هٰذَا نَذِیْرٌ مِّنَ النُّذُرِ الْاُوْلٰی ۟

53.56. உங்களின்பால் அனுப்பப்பட்ட இந்த தூதர் முந்தைய தூதர்களின் இனத்திலுள்ளவர்தாம். info
التفاسير:

external-link copy
57 : 53

اَزِفَتِ الْاٰزِفَةُ ۟ۚ

53.57. நெருங்கி வரக்கூடிய மறுமை நாள் நெருங்கிவிட்டது. info
التفاسير:

external-link copy
58 : 53

لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ۟ؕ

53.58. அதனை தடுப்பவர் எவரும் இல்லை. அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அதனை அறிய முடியாது. info
التفاسير:

external-link copy
59 : 53

اَفَمِنْ هٰذَا الْحَدِیْثِ تَعْجَبُوْنَ ۟ۙ

53.59. உங்களிடம் எடுத்துரைக்கப்படும் இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்று நீங்கள் ஆச்சரியமடைகின்றீர்களா? info
التفاسير:

external-link copy
60 : 53

وَتَضْحَكُوْنَ وَلَا تَبْكُوْنَ ۟ۙ

53.60. அதன் அறிவுரைகளைக் கேட்கும் போது அழாமல் அதனைப் பரிகாசம் செய்தவாறு சிரிக்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
61 : 53

وَاَنْتُمْ سٰمِدُوْنَ ۟

53.61. நீங்கள் அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றீர்கள். info
التفاسير:

external-link copy
62 : 53

فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ۟

53.62. அல்லாஹ்வுக்கு மட்டும் நீங்கள் சிரம்பணியுங்கள். வணக்க வழிபாட்டை அவனுக்கு உரித்தாக்கிக் கொள்ளுங்கள். info
التفاسير:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• عدم التأثر بالقرآن نذير شؤم.
1. குர்ஆனைக் கொண்டு தாக்கமடையாமல் இருப்பது துர்ச்சகுனத்திற்கான எச்சரிக்கையாகும். info

• خطر اتباع الهوى على النفس في الدنيا والآخرة.
2. இவ்வுலகிலும் மறுவுலகிலும் மன இச்சையைப் பின்பற்றுவதனால் ஆன்மாவுக்கு ஏற்படும் ஆபத்து. info

• عدم الاتعاظ بهلاك الأمم صفة من صفات الكفار.
3. முந்தைய சமூகங்கள் அழிக்கப்பட்டதைக் கொண்டு படிப்பினை பெறாமல் இருப்பது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். info