আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ

external-link copy
68 : 5

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَسْتُمْ عَلٰی شَیْءٍ حَتّٰی تُقِیْمُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ ؕ— وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ۚ— فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟

5.68. தூதரே! நீர் கூறுவீராக: “யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே! தவ்ராத்தின்படியும் இன்ஜீலின்படியும் அல்லாஹ் உங்களுக்கு இறக்கிய குர்ஆனின்படியும் நீங்கள் செயல்படும் வரை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க எந்த மார்க்கத்திலும் இல்லை. அல்குர்ஆனை நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயற்படாவிட்டால் உங்களது நம்பிக்கை செல்லுபடியாகாது. உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை வேதக்காரர்களில் பெரும்பாலானோருக்கு - அவர்களின் பொறாமையினால்- வரம்பு மீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்துகிறது. இந்த நிராகரிப்பாளர்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர். உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களே உமக்குப் போதுமானவர்கள். info
التفاسير:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• العمل بما أنزل الله تعالى سبب لتكفير السيئات ودخول الجنة وسعة الأرزاق.
1. அல்லாஹ் இறக்கியதன்படி செயல்படுவது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் சுவனம் செல்வதற்கும் வாழ்வாதாரம் விசாலமாக வழங்கப்படுவதற்கும் காரணமாக அமைகிறது. info

• توجيه الدعاة إلى أن التبليغ المُعتَدَّ به والمُبْرِئ للذمة هو ما كان كاملًا غير منقوص، وفي ضوء ما ورد به الوحي.
2. குறைவின்றிப் பரிபூரணமான முறையிலும் வஹியின் ஒளியிலும் அமைந்த அழைப்புப் பணியே ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும் என அழைப்பாளர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. info

• لا يُعْتد بأي معتقد ما لم يُقِمْ صاحبه دليلًا على أنه من عند الله تعالى.
3. அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரத்தை நிலைநாட்டாதவரை எக்கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது. info