《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

页码:close

external-link copy
61 : 26

فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰۤی اِنَّا لَمُدْرَكُوْنَ ۟ۚ

26.61. இரு கூட்டத்தாரும் - ஃபிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் மூஸாவும் அவரது கூட்டத்தாரும் - நேருக்குநேர் எதிர்கொண்டபோது மூஸாவின் தோழர்கள் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் நம்மைப் பிடித்துவிடுவார்கள். நமக்கு அவர்களுடன் மோதும் பலம் இல்லை.” info
التفاسير:

external-link copy
62 : 26

قَالَ كَلَّا ۚ— اِنَّ مَعِیَ رَبِّیْ سَیَهْدِیْنِ ۟

26.62. மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக ஆதரவளித்து உதவி செய்ய என் இறைவன் என்னுடன் இருக்கின்றான். அவன் எனக்கு தப்புவதற்கான பாதையைக் காட்டுவான்.” info
التفاسير:

external-link copy
63 : 26

فَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ ؕ— فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِیْمِ ۟ۚ

26.63. தம் கைத்தடியால் கடலை அடிக்குமாறு கட்டளையிட்டு நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம். அவர் அவ்வாறு அடித்தார். கடல் பிளந்து இஸ்ராயீலின் மக்களின் பன்னிரண்டு குலங்களுக்கேற்ப பன்னிரண்டு பாதைகளாக மாறியது. கடலில் இருந்து பிளந்த ஒவ்வொரு பிளவும் தண்ணீர் புகாதவாறு உறுதியான பிரமாண்டமான பெரும் மலைகளை போன்று இருந்தது. info
التفاسير:

external-link copy
64 : 26

وَاَزْلَفْنَا ثَمَّ الْاٰخَرِیْنَ ۟ۚ

26.64. ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் நாம் நெருக்கமாகக் கொண்டுவந்தோம். செல்லமுடியுமான பாதை என்ற எண்ணத்தில் அவர்கள் கடலில் புகுந்தனர். info
التفاسير:

external-link copy
65 : 26

وَاَنْجَیْنَا مُوْسٰی وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۚ

26.65. மூஸாவையும் அவருடன் இருந்த இஸ்ராயீலின் மக்களையும் நாம் காப்பாற்றினோம். அவர்களில் யாரும் அழியவில்லை. info
التفاسير:

external-link copy
66 : 26

ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟ؕ

26.66. பின்னர் ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் கடலில் மூழ்கடித்து அழித்துவிட்டோம். info
التفاسير:

external-link copy
67 : 26

اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ— وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟

26.67. நிச்சயமாக மூஸாவுக்காக கடல் பிளந்து அவர் தப்பியதிலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அழிக்கப்பட்டதிலும் மூஸாவின் நம்பகத்தன்மைக்கான சான்று இருக்கின்றது. ஆயினும் ஃபிர்அவ்னுடன் இருந்தவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாய் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
68 : 26

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠

26.68. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவர்களில் தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களுடன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
69 : 26

وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ اِبْرٰهِیْمَ ۟ۘ

26.69. -தூதரே!- அவர்களுக்கு இப்ராஹீமின் சம்பவத்தை எடுத்துரைப்பீராக. info
التفاسير:

external-link copy
70 : 26

اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ ۟

26.70. அவர் தம் தந்தை ஆசரிடமும் சமூகத்திடமும் கேட்டார்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” info
التفاسير:

external-link copy
71 : 26

قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِیْنَ ۟

26.71. அவரது சமூகத்தார் அவருக்கு கூறினார்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் தொடர்ந்தும் நிலைத்திருப்போம்.” info
التفاسير:

external-link copy
72 : 26

قَالَ هَلْ یَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۟ۙ

26.72. இப்ராஹீம் அவர்களிடம் கேட்டார்: “நீங்கள் உங்கள் சிலைகளை அழைக்கும்போது உங்களின் அழைப்பை அவை செவியேற்கின்றனவா? info
التفاسير:

external-link copy
73 : 26

اَوْ یَنْفَعُوْنَكُمْ اَوْ یَضُرُّوْنَ ۟

26.73. அல்லது நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால் அவை உங்களுக்குப் பலனளிக்கின்றனவா? அல்லது மாறுசெய்தால் தீங்கிழைக்கின்றனவா? info
التفاسير:

external-link copy
74 : 26

قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟

26.74. அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அவற்றை அழைத்தால் அவை எங்களின் அழைப்பை செவியுறாது. அவற்றிற்குக் கட்டுப்பட்டால் எங்களுக்குப் பலனளிக்காது; மாறுசெய்தால் தீங்கிழைக்காது. மாறாக எங்களின் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம். நாமும் அவர்களைப் பின்பற்றுகிறோம்.” info
التفاسير:

external-link copy
75 : 26

قَالَ اَفَرَءَیْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ

26.76. இப்ராஹீம் கேட்டார்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களைக் குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா? info
التفاسير:

external-link copy
76 : 26

اَنْتُمْ وَاٰبَآؤُكُمُ الْاَقْدَمُوْنَ ۟ؗ

76. உங்கள் முன்னோர்களான உங்களின் தந்தைகள் வணங்கியவற்றையும் (குறித்து நீங்கள் சிந்தித்தீர்களா?) info
التفاسير:

external-link copy
77 : 26

فَاِنَّهُمْ عَدُوٌّ لِّیْۤ اِلَّا رَبَّ الْعٰلَمِیْنَ ۟ۙ

26.77. நிச்சயமாக அவையனைத்தும் எனக்கு எதிரிகள். ஏனெனில் நிச்சயமாக படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் பொய்யானவை. info
التفاسير:

external-link copy
78 : 26

الَّذِیْ خَلَقَنِیْ فَهُوَ یَهْدِیْنِ ۟ۙ

26.78. அவனே என்னைப் படைத்தான். இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மையின்பால் அவனே எனக்கு வழிகாட்டுவான். info
التفاسير:

external-link copy
79 : 26

وَالَّذِیْ هُوَ یُطْعِمُنِیْ وَیَسْقِیْنِ ۟ۙ

26.79. எனக்குப் பசியெடுத்தால் அவனே எனக்கு உணவளிக்கிறான். நான் தாகித்தால் அவனே எனக்கு நீர் புகட்டுகிறான். info
التفاسير:

external-link copy
80 : 26

وَاِذَا مَرِضْتُ فَهُوَ یَشْفِیْنِ ۟

26.80. நான் நோய்வாய்ப்பட்டால் அவனே எனக்குக் குணமளிக்கிறான். அவனைத் தவிர என்னைக் குணப்படுத்தும் எவரும் இல்லை. info
التفاسير:

external-link copy
81 : 26

وَالَّذِیْ یُمِیْتُنِیْ ثُمَّ یُحْیِیْنِ ۟ۙ

26.81. என் தவணை நிறைவடைந்தால் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். நான் மரணித்த பிறகு அவனே எனக்கு உயிரளிப்பான். info
التفاسير:

external-link copy
82 : 26

وَالَّذِیْۤ اَطْمَعُ اَنْ یَّغْفِرَ لِیْ خَطِیْٓـَٔتِیْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ

26.82. கூலிகொடுக்கப்படும் நாளில் அவனே என் பாவங்களை மன்னிப்பான் என்று நான் ஆதரவு வைக்கிறேன். info
التفاسير:

external-link copy
83 : 26

رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟ۙ

26.83. இப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! எனக்கு மார்க்கத்தில் ஞானத்தை வழங்குவாயாக. என்னை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து எனக்கு முன் சென்ற நல்லவர்களான நபிமார்களுடன் சேர்த்தருள்வாயாக.” info
التفاسير:
这业中每段经文的优越:
• الله مع عباده المؤمنين بالنصر والتأييد والإنجاء من الشدائد.
1. உதவி செய்தல், பலப்படுத்தல், துன்பங்களிலிருந்து பாதுகாத்தல் என்பற்றின் மூலம் அல்லாஹ் தனது நம்பிக்கையுள்ள அடியார்களுடன் உள்ளான். info

• ثبوت صفتي العزة والرحمة لله تعالى.
2. அல்லாஹ்வுக்கு கண்ணியம், கருணை என்ற இரு பண்புகளும் இருப்பது உறுதியாகிறது. info

• خطر التقليد الأعمى.
3. கண்மூடிப் பின்பற்றுவதன் விபரீதம். info

• أمل المؤمن في ربه عظيم.
4.நம்பிக்கையாளன் தனது இறைவனின் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு மகத்தானதாகும். info