د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

external-link copy
259 : 2

اَوْ كَالَّذِیْ مَرَّ عَلٰی قَرْیَةٍ وَّهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ۚ— قَالَ اَنّٰی یُحْیٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ۚ— فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ؕ— قَالَ كَمْ لَبِثْتَ ؕ— قَالَ لَبِثْتُ یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ— قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰی طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ یَتَسَنَّهْ ۚ— وَانْظُرْ اِلٰی حِمَارِكَ۫— وَلِنَجْعَلَكَ اٰیَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَی الْعِظَامِ كَیْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ؕ— فَلَمَّا تَبَیَّنَ لَهٗ ۙ— قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்து சென்றாரே அவரைப் போன்று ஒருவரை நீர் கவனிக்கவில்லையா? “இ(ந்த கிராமத்)தை, அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?’’ என்று அவர் கூறினார். ஆக, அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டுகள் வரை மரணத்தைக் கொடுத்தான், பிறகு, அவரை அவன் உயிர்ப்பித்தான். அல்லாஹ் கூறினான்: “நீர் எத்தனை (காலம் இங்கே) தங்கினீர்?’’ அவர் கூறினார்: “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்.’’ அல்லாஹ் கூறினான்: “மாறாக! நீர் நூறு ஆண்டுகள் (இங்கு) தங்கினீர். ஆக, உமது உணவையும், உமது பானத்தையும் நீர் பார்ப்பீராக! அவை கெட்டுப் போகவில்லை. இன்னும் உமது கழுதையைப் பார்ப்பீராக!. (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). இன்னும், (கழுதையின்) எலும்புகளைப் பார்ப்பீராக, எவ்வாறு அவற்றை அசைத்து (சிலவற்றுக்கு மேல் சிலவற்றை) உயர்த்துகிறோம்; பிறகு அவற்றுக்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்!! (இறந்த பிராணியை அல்லாஹ் உயிர்ப்பித்தது) தெளிவாக தெரிந்தபோது, “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) நான் அறிகிறேன்’’ என்று அவர் கூறினார். info
التفاسير: