د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
93 : 2

وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ— خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ؕ— قَالُوْا سَمِعْنَا وَعَصَیْنَا ۗ— وَاُشْرِبُوْا فِیْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ؕ— قُلْ بِئْسَمَا یَاْمُرُكُمْ بِهٖۤ اِیْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

2.93. மூசாவைப் பின்பற்ற வேண்டும், அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். உங்களை அச்சமூட்டுவதற்காக உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் கூறினோம், நாம் உங்களுக்கு வழங்கிய தவ்ராத்தை முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். கட்டுப்பட்டவாறு செவிசாயுங்கள். அவ்வாறு இல்லையெனில் நாம் உங்களின் மீது மலையை விழச்செய்துவிடுவோம்.எங்கள் செவிகளால் கேட்டு செயல்களால் மாறுசெய்தோம் என்று கூறினீர்கள். அவர்களின் நிராகரிப்பினால் காளைக்கன்று வழிபாடு அவர்களின் உள்ளங்களில் நிலைகொண்டுவிட்டது. தூதரே! நீர் கூறும், நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இந்த ஈமான் உங்களுக்குக் கட்டளையிடும் நிராகரிப்பு மோசமானது! ஏனெனில் உண்மையான ஈமானுடன் நிராகரிப்பு ஒருபோதும் கலந்திருக்காது. info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• اليهود أعظم الناس حسدًا؛ إذ حملهم حسدهم على الكفر بالله وردِّ ما أنزل، بسبب أن الرسول صلى الله عليه وسلم لم يكن منهم.
1. யூதர்கள் பொறாமைமிகுந்தவர்கள். அதனால்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தில் உள்ளவரல்ல என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வையும், அவன் இறக்கியவற்றையும் அவர்கள் நிராகரித்தனர். info

• أن الإيمان الحق بالله تعالى يوجب التصديق بكل ما أَنزل من كتب، وبجميع ما أَرسل من رسل.
2. அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கைகொள்வது, அவன் அனுப்பிய தூதர்கள் அனைவரையும், இறக்கிய வேதங்கள் அனைத்தையும் உண்மைப்படுத்துவதை கட்டாயமாக்குகிறது. info

• من أعظم الظلم الإعراض عن الحق والهدى بعد معرفته وقيام الأدلة عليه.
3.சத்தியத்தையும் நேர்வழியையும் அறிந்து, தகுந்த ஆதாரங்கள் கிடைத்த பின்னர் அவற்றைப் புறக்கணிப்பது பெரும் ஒரு அநியாயமாகும். info

• من عادة اليهود نقض العهود والمواثيق، وهذا ديدنهم إلى اليوم.
4. ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் முறிப்பது யூதர்களின் வழமையாகும். இன்று வரை இது அவர்களிடம் குடிகொண்டுள்ளது. info