വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് വിവർത്തനം - അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി

പേജ് നമ്പർ:close

external-link copy
119 : 6

وَمَا لَكُمْ اَلَّا تَاْكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَیْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَّا حَرَّمَ عَلَیْكُمْ اِلَّا مَا اضْطُرِرْتُمْ اِلَیْهِ ؕ— وَاِنَّ كَثِیْرًا لَّیُضِلُّوْنَ بِاَهْوَآىِٕهِمْ بِغَیْرِ عِلْمٍ ؕ— اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِیْنَ ۟

119. (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றை அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை)? நீங்கள் நிர்பந்திக்கப்பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கிறான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படியெல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான். info
التفاسير:

external-link copy
120 : 6

وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ ؕ— اِنَّ الَّذِیْنَ یَكْسِبُوْنَ الْاِثْمَ سَیُجْزَوْنَ بِمَا كَانُوْا یَقْتَرِفُوْنَ ۟

120. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும் ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை அடைந்தே தீருவார்கள். info
التفاسير:

external-link copy
121 : 6

وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ یُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَیْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ ؕ— وَاِنَّ الشَّیٰطِیْنَ لَیُوْحُوْنَ اِلٰۤی اَوْلِیٰٓـِٕهِمْ لِیُجَادِلُوْكُمْ ۚ— وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ ۟۠

121. (நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாத வற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்! info
التفاسير:

external-link copy
122 : 6

اَوَمَنْ كَانَ مَیْتًا فَاَحْیَیْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا یَّمْشِیْ بِهٖ فِی النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِی الظُّلُمٰتِ لَیْسَ بِخَارِجٍ مِّنْهَا ؕ— كَذٰلِكَ زُیِّنَ لِلْكٰفِرِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

122. (வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய)செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன. info
التفاسير:

external-link copy
123 : 6

وَكَذٰلِكَ جَعَلْنَا فِیْ كُلِّ قَرْیَةٍ اَكٰبِرَ مُجْرِمِیْهَا لِیَمْكُرُوْا فِیْهَا ؕ— وَمَا یَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا یَشْعُرُوْنَ ۟

123. இவ்வாறே, ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கிறோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கே தவிர, (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
124 : 6

وَاِذَا جَآءَتْهُمْ اٰیَةٌ قَالُوْا لَنْ نُّؤْمِنَ حَتّٰی نُؤْتٰی مِثْلَ مَاۤ اُوْتِیَ رُسُلُ اللّٰهِ ؔۘؕ— اَللّٰهُ اَعْلَمُ حَیْثُ یَجْعَلُ رِسَالَتَهٗ ؕ— سَیُصِیْبُ الَّذِیْنَ اَجْرَمُوْا صَغَارٌ عِنْدَ اللّٰهِ وَعَذَابٌ شَدِیْدٌۢ بِمَا كَانُوْا یَمْكُرُوْنَ ۟

124. அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் ‘‘அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரை நாங்கள் (அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும். info
التفاسير: