Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran

Numéro de la page:close

external-link copy
12 : 19

یٰیَحْیٰی خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ؕ— وَاٰتَیْنٰهُ الْحُكْمَ صَبِیًّا ۟ۙ

19.12. அவருக்கு யஹ்யா பிறந்தார். யஹ்யா உரையாடும் வயதை அடைந்த போது நாம் அவரிடம் கூறினோம்: “யஹ்யாவே! தவ்ராத்தை உறுதியுடன் பற்றிக் கொள்வீராக.” அவர் சிறுவராக இருந்த போதே நாம் அவருக்குப் புரிதலையும், கல்வியையும், உறுதியையும் வழங்கினோம்.” info
التفاسير:

external-link copy
13 : 19

وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً ؕ— وَكَانَ تَقِیًّا ۟ۙ

19.13. நாம் நம் புறத்திலிருந்து அவருக்கு அருளை வழங்கினோம். பாவங்களிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தினோம். அவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவராக இருந்தார். info
التفاسير:

external-link copy
14 : 19

وَّبَرًّا بِوَالِدَیْهِ وَلَمْ یَكُنْ جَبَّارًا عَصِیًّا ۟

19.14. அவர் தம் தாய், தந்தையருக்கு உபகாரம் செய்யக்கூடியவராகவும், மிருதுவாக, அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளக்கூடியவராகவும் இருந்தார். அவர் தம் இறைவனுக்கும், அவ்விருவருக்கும் கட்டுப்படாமல் கர்வம் கொள்ளக்கூடியவராக இருக்கவில்லை. இறைவனின் கட்டளைக்கோ, தாய், தந்தையரின் கட்டளைக்கோ மாறாகச் செயல்படக்கூடியவராகவும் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
15 : 19

وَسَلٰمٌ عَلَیْهِ یَوْمَ وُلِدَ وَیَوْمَ یَمُوْتُ وَیَوْمَ یُبْعَثُ حَیًّا ۟۠

19.15. அவர் பிறந்த நாளிலும், மரணித்து வாழ்விலிருந்து வெளியேறும் நாளிலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளிலும் அல்லாஹ்விடமிருந்து சாந்தியும், பாதுகாப்பும் அவருக்கு உண்டாகட்டும். இந்த மூன்று இடங்களும் மனிதன் மிகவும் அஞ்சக்கூடிய இடங்களாகும். இவற்றில் அவன் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் ஏனைய இடங்களில் எந்த அச்சமும் கொள்ளவேண்டியதில்லை. info
التفاسير:

external-link copy
16 : 19

وَاذْكُرْ فِی الْكِتٰبِ مَرْیَمَ ۘ— اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِیًّا ۟ۙ

19.16. -தூதரே!- உமக்கு இறக்கப்பட்ட குர்ஆனில் மர்யமைக் குறித்து நினைவு கூர்வீராக. அவர் தம் குடும்பத்தாரை விட்டு தனித்து தூரமாகி கிழக்குத் திசையிலுள்ள ஓரிடத்திற்குச் சென்று விட்டார். info
التفاسير:

external-link copy
17 : 19

فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا ۫— فَاَرْسَلْنَاۤ اِلَیْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِیًّا ۟

19.17. தான் இறைவனை வணங்கும் போது தன் சமூகத்தார் யாரும் தன்னைப் பார்க்காதவண்ணம் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். நாம் அவரிடம் ஜிப்ரீலை அனுப்பினோம். அவர் குறைகளற்ற மனித உருவில் மர்யமுக்கு முன்னால் தோன்றினார். தம்முடன் நிச்சயமாக அவர் தீய விஷயத்தை நாடுகிறார் என்று எண்ணிப் மர்யம் பயந்துவிட்டார். info
التفاسير:

external-link copy
18 : 19

قَالَتْ اِنِّیْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِیًّا ۟

19.18. மர்யம் அவரை குறைகளற்ற மனித உருவில் தன்னை நெருங்கி வருவதைக் கண்டபோது கூறினார்: “-எ மனிதா!- நீ அல்லாஹ்வை பயந்து அஞ்சக் கூடியவராக இருந்தால் நான் உம்மால் ஏற்படும் தீங்கினை விட்டு அளவிலாக் கருணையாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” info
التفاسير:

external-link copy
19 : 19

قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ۖۗ— لِاَهَبَ لَكِ غُلٰمًا زَكِیًّا ۟

19.19. ஜிப்ரீல் கூறினார்: “நான் மனிதர் அல்ல. உம் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன். உமக்கு தூய்மையான குழந்தையை நன்கொடையாக வழங்குவதற்காக அவன் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான்.” info
التفاسير:

external-link copy
20 : 19

قَالَتْ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِیًّا ۟

19.20. மர்யம் ஆச்சரியமாகக் கேட்டார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? கணவரோ, மற்றவர்களோ என்னை நெருங்கியதில்லையே! பிள்ளை உண்டாவதற்கு நான் விபச்சாரியும் அல்லவே!? info
التفاسير:

external-link copy
21 : 19

قَالَ كَذٰلِكِ ۚ— قَالَ رَبُّكِ هُوَ عَلَیَّ هَیِّنٌ ۚ— وَلِنَجْعَلَهٗۤ اٰیَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ— وَكَانَ اَمْرًا مَّقْضِیًّا ۟

19.21. ஜிப்ரீல் அவரிடம் கூறினார்: “விஷயம் நீர் கூறியவாறு, கணவரோ மற்றவர்களோ உம்மைத் தீண்டியதுமில்லை. விபச்சாரியாகவும் இருக்கவில்லை. ஆனால் உம் இறைவன் கூறுகிறான், தந்தையின்றி ஒரு குழந்தையை பிறக்கவைப்பது எனக்கு மிகவும் எளிதானது. நாம் அதனை மக்களுக்கு நம் வல்லமையை அறிவிக்கும் சான்றாகவும் உமக்கும் அவரை நம்பியோருக்கும் நமது அருளாகவும் இருப்பதற்காக அவ்வாறு செய்கிறோம். இவ்வாறு உம் குழந்தையைப் படைப்பது லவ்ஹுல் மஹ்ஃபூல் ஏட்டில் எழுதப்பட்ட, அல்லாஹ்வின் நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். info
التفاسير:

external-link copy
22 : 19

فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِیًّا ۟

19.22. வானவர் ஊதிய பிறகு அவள் கர்ப்பமுற்றாள். அதனை எடுத்துக்கொண்டு மக்களை விட்டும் தூரமான இடத்திற்குச் சென்றுவிட்டாள். info
التفاسير:

external-link copy
23 : 19

فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰی جِذْعِ النَّخْلَةِ ۚ— قَالَتْ یٰلَیْتَنِیْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْیًا مَّنْسِیًّا ۟

19.23. பிரசவ வேதனை அவரை பேரீச்சை மரத்தின் தண்டின்பால் கொண்டு சென்றது. மர்யம் கூறினாள்: “நான் இந்த நாளுக்கு முன்னரே இறந்து போயிருக்க வேண்டுமே! மக்கள் என்னைப் பற்றி தவறாக எண்ணாமல் இருக்க நான் நினைவுகூரப்படாத ஒரு பொருளாக, இருந்திருக்க வேண்டுமே! info
التفاسير:

external-link copy
24 : 19

فَنَادٰىهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِیْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِیًّا ۟

19.24. மர்யமின் பாதங்களுக்குக் கீழ்ப்புறமிருந்து மர்யமை ஈஸா அழைத்துக் கூறினார்: “கவலைப்படாதீர். அல்லாஹ் உமக்குக் கீழே ஒரு நீரோடையை ஏற்படுத்தியுள்ளான். அதிலிருந்து நீர் பருகலாம்” info
التفاسير:

external-link copy
25 : 19

وَهُزِّیْۤ اِلَیْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَیْكِ رُطَبًا جَنِیًّا ۟ؗ

19.25. பேரீச்சை தண்டுப் பகுதியைப் பிடித்து அசைப்பீராக. அது கனிந்த புதிய பேரீச்சைகளை உம் பக்கம் உதிர்க்கும். info
التفاسير:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• الصبر على القيام بالتكاليف الشرعية مطلوب.
1. மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். info

• علو منزلة بر الوالدين ومكانتها عند الله، فالله قرنه بشكره.
2. பெற்றோருக்கு உபகாரம் புரிவது அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்த அந்தஸ்துமிக்கதாகும். எனவேதான் அதனை தனக்கு நன்றி செலுத்துவதுடன் இணைத்துக் கூறியுள்ளான். info

• مع كمال قدرة الله في آياته الباهرة التي أظهرها لمريم، إلا أنه جعلها تعمل بالأسباب ليصلها ثمرة النخلة.
3. மர்யமுக்காக அல்லாஹ் வெளிப்படுத்திய பாரிய அத்தாட்சிகள் அல்லாஹ்வின் பரிபூரண வல்லமையாக இருந்தாலும் அவருக்கு பேரீச்ச மரத்தின் பழம் கிடைக்க காரண காரியங்களில் ஈடுபட வைத்தான். info