আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ

পৃষ্ঠা নং:close

external-link copy
181 : 3

لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِیْرٌ وَّنَحْنُ اَغْنِیَآءُ ۘ— سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ۙۚ— وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟

“நிச்சயமாக அல்லாஹ் ஏழையாவான். இன்னும், நாங்கள் செல்வந்தர்கள்’’ என்று கூறியவர்களுடைய கூற்றை திட்டவட்டமாக அல்லாஹ் செவியுற்றான். அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவுசெய்வோம். இன்னும், “எரித்து பொசுக்கும் தண்டனையை சுவையுங்கள்’’ என்று கூறுவோம். info
التفاسير:

external-link copy
182 : 3

ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۚ

அதற்கு காரணம், “உங்கள் கரங்கள் முற்படுத்தியதும், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு அநீதியிழைப்பவனாக இல்லை என்பதும் ஆகும்.’’ info
التفاسير:

external-link copy
183 : 3

اَلَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَیْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰی یَاْتِیَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ ؕ— قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِیْ بِالْبَیِّنٰتِ وَبِالَّذِیْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

“நெருப்பு அதை சாப்பிடும்படியான ஒரு (குர்பானி) பலியை எங்களிடம் தூதர் எவரும் கொண்டுவருகின்ற வரை நாங்கள் அவரை நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் எங்களிடம் நிச்சயமாக உடன்படிக்கை செய்திருக்கிறான்’’ என்று அவர்கள் கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “எனக்கு முன்னர் உங்களிடம் பல தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையும் நீங்கள் கூறியதையும் திட்டமாக கொண்டு வந்தார்கள். ஆகவே, நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை (ஏன் நிராகரித்தீர்கள். இன்னும்,) ஏன் கொலை செய்தீர்கள்?’’ info
التفاسير:

external-link copy
184 : 3

فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَآءُوْ بِالْبَیِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِیْرِ ۟

ஆக, (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், உமக்கு முன்னர் தெளிவான அத்தாட்சிகளையும் வேத நூல்களையும் ஒளிவீசுகிற வேதத்தையும் கொண்டு வந்த பல தூதர்களும் திட்டமாக பொய்ப்பிக்கப்பட்டுள்ளார்கள். info
التفاسير:

external-link copy
185 : 3

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ— وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ؕ— وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟

ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே. இன்னும், உங்கள் கூலிகளை நீங்கள் முழுமையாக கொடுக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆக, எவர் (நரக) நெருப்பிலிருந்து தூரமாக்கப்பட்டு சொர்க்கத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவாரோ, (அவர்) திட்டமாக வெற்றி பெற்றார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர (வேறு) இல்லை. info
التفاسير:

external-link copy
186 : 3

لَتُبْلَوُنَّ فِیْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ۫— وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْۤا اَذًی كَثِیْرًا ؕ— وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟

(நம்பிக்கையாளர்களே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆன்மாக்களிலும் நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மூலமும், இணைவைத்து வணங்குபவர்களின் மூலமும் அதிகமான வசை மொழியை (-உங்களை சங்கடப்படுத்தும் பேச்சுகளை) நிச்சயம் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி (பாவங்களை விட்டு விலகி) வாழ்ந்தால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க (வீரமிகுந்த, வெற்றிக்குரிய) காரியங்களில் உள்ளதாகும். info
التفاسير: