2.17. இந்த நயவஞ்சகர்களுக்கு நெருப்பைக் கொண்டும் நீரைக் கொண்டும் அல்லாஹ் இரண்டு உதாரணங்களைக் கூறுகிறான். நெருப்பைக் கொண்டு கூறப்படும் உதாரணம், அவர்கள் வெளிச்சம் பெறுவதற்காக நெருப்பை மூட்டினார்கள். அது ஒளி வீசி அதிலிருந்து அவர்கள் பயனடைய எண்ணியபோது அந்த ஒளி அணைந்து வெப்பம் மட்டுமே எஞ்சிவிட்டது. இதன் விளைவாக, அவர்கள் எதையும் பார்க்கவோ, எந்த வழியையும் அறியவோ முடியாத இருட்டில் மூழ்கிவிட்டார்கள்.
التفاسير:
18:2
صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَرْجِعُوْنَ ۟ۙ
2.18. அவர்கள், சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் செவிமடுக்காத செவிடர்கள்; அதனைப் பேசாத ஊமையர்கள். அதனைப் பார்க்காத குருடர்கள். எனவே, தமது வழிகேட்டிலிருந்து அவர்கள் திரும்பமாட்டார்கள்.
2.19. தண்ணீரைக் கொண்டு கூறப்படும் உதாரணம், மேகம் கறுத்து இருள் சூழ இடியும் மின்னலுமாகப் பெய்யும் பேய்மழையில் சிக்கிவிட்ட ஒரு கூட்டத்தின் நிலைமைக்கு ஒப்பாகும். அதனால் அவர்கள் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள். கடுமையான இடிமுழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தங்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கிறார்கள். நிராகரிப்பாளர்களை அல்லாஹ் சூழ்நதுள்ளான். அவனிடமிருந்து அவர்கள் தப்பவே முடியாது.
2.20. பளீரென்று ஒளிரும் வெளிச்சத்தாலும் பளபளப்பாலும் அந்த மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அது வெளிச்சம் தரும்போதெல்லாம் அவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். அது வெளிச்சம் தராதபோது அசையாமல் இருளில் அப்படியே நின்றுவிடுகிறார்கள். சத்தியத்தை அவர்கள் புறக்கணித்தனால் அல்லாஹ் நாடினால் அனைத்தையும் வியாபித்த தனது ஆற்றலினால் அவர்களின் செவிப்புலனையும் பார்வையையும் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்காத வகையில் பறித்துவிடுவான். இங்கு மழை என்பது குர்ஆனையும் இடிமுழக்கம் என்பது அதிலுள்ள எச்சரிக்கைகளையும் மின்னல் வெளிச்சம் என்பது சிலவேளை அவர்களுக்குத் தோன்றும் சத்தியத்தையும், இடிமுழக்கங்களால் காதுகளை அடைத்துக்கொள்ளுதல் என்பது சத்தியத்தை அவர்கள் புறக்கணித்து அதற்குப் பதிலளிக்காதிருப்பதையும் குறிக்கிறது. இந்த இரண்டு உதாரணங்களில் கூறப்பட்டோருக்கும் நயவஞ்சகர்களுக்கும் இடையிலுள்ள ஒற்றுமை, பயனடையாமை ஆகும். நெருப்பு உதாரணத்தில் அதனை மூட்டியவன் இருளையும் வெப்பத்தையும் தவிர வேறு எந்தப் பயனையும் அடையவில்லை. நீரைக் கொண்டு சொல்லப்பட்ட உதாரணத்தில் மழையைப் பெற்றவர்கள் தங்களைப் பயமுறுத்திச் சிரமப்படுத்துகிற இடியையும் மின்னலையும் தவிர வேறு எந்தப் பயனையும் அடையவில்லை. இவ்வாறே நயவஞ்சகர்களும் இஸ்லாமில் கடுமையையும் சிரமத்தையும் தவிர வேறொன்றையும் காணமாட்டார்கள்.
2.21. மனிதர்களே! உங்கள் இறைவனை மட்டுமே வணங்குங்கள். ஏனெனில், அவன்தான் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்த சமூகங்களையும் படைத்தான். இதனால் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி உங்களுக்கும் அவனுடைய தண்டனைக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
2.22. அவன்தான் உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும், அதற்கு மேலே வானத்தை நன்கு கட்டமைக்கப்பட்ட முகடாகவும் ஆக்கினான். அவனே மழையைப் பொழிய வைத்து அருட்கொடைகளை அளிப்பவன். அதன் மூலம் பல வகையான தாவரங்களை முளைக்கச் செய்து உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குபவன். எனவே, அவனைத்தவிர வேறு படைப்பாளி எவனுமில்லை என்பதை அறிந்துகொண்டே அவனுக்கு இணைகளையோ பங்காளிகளையோ ஏற்படுத்திவிடாதீர்கள்.
2.23. மனிதர்களே! நம்முடைய அடியார் முஹம்மது மீது நாம் இறக்கிய குர்ஆனின் மீது நீங்கள் சந்தேகம் கொண்டால் நாம் உங்களுக்குச் சவால் விடுகிறோம். உங்கள் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். அது மிகச்சிறிய அத்தியாயமாக இருந்தாலும் சரியே. முடியுமான உங்களின் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.
2.24. நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாதுதான். தண்டனைக்குரிய மனிதர்களையும் மற்றும் அவர்கள் வணங்கிவந்த, வணங்காத பலவகை கற்களையும் எரிபொருளாகக்கொண்டு எரிக்கப்படுகின்ற நரக நெருப்புக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். தன்னை நிராகரிப்பவர்களுக்காகவே அல்லாஹ் இந்த நெருப்பை தயார்படுத்தி வைத்துள்ளான்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• أن الله تعالى يخذل المنافقين في أشد أحوالهم حاجة وأكثرها شدة؛ جزاء نفاقهم وإعراضهم عن الهدى.
1. நயவஞ்சகத்துடன் இருப்பதாலும், நேர்வழியைப் புறக்கணித்ததாலும் நயவஞ்சகர்களை அவர்களுக்கு உதவிதேவைப்படும் கடினமான சூழ்நிலைகளில் அல்லாஹ் கைவிட்டுவிடுகிறான்.
• من أعظم الأدلة على وجوب إفراد الله بالعبادة أنه تعالى هو الذي خلق لنا ما في الكون وجعله مسخَّرًا لنا.
2. வணக்க வழிபாட்டை அல்லாஹ்வுக்கு மட்டும் உரித்தாக்க வேண்டும் என்பதற்கு மிகப் பெரிய ஆதாரம், அவன்தான் இந்த உலகில் உள்ள அனைத்தையும் நமக்காகப் படைத்து, அவற்றை நமக்கு வசப்படுத்தித்தந்தான்.
• عجز الخلق عن الإتيان بمثل سورة من القرآن الكريم يدل على أنه تنزيل من حكيم عليم.
3. குர்ஆனில் காணப்படும் அத்தியாயத்தைப் போல் ஒரே ஓர் அத்தியாயத்தைக்கூட படைப்புகள் எவராலும் கொண்டுவர முடியவில்லை. நன்கறிந்தவனும் ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதே இந்த வேதம் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.